புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு

0
1

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரெட்டிமாங்குடி, பெருவளப்பூர், வந்தலைக் கூடலூர், பி.சங்கேந்தி ஆகிய கிராம ஊராட்சிகளில் ரூபாய் 1 கோடியே 86 இலட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில்; 20 வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம்  ரெட்டிமாங்குடி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 7,900 மதிப்பில் தனிநபர் உறிஞ்சு குழி கட்டப்பட்டுள்ளதையும், தலா ரூபாய் 12 ஆயிரம் மதிப்பில் 2 தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதையும், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் கால்நடை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 34 ஆயிரம் மதிப்பில் பள்ளிவிடை ஏரி அருகில் ரீசார்ஜ் பிட் (Recharge Pit) அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 8.61 மதிப்பில் கரும்பாறை ஓடை அருகில் தடுப்பணை கட்டும் பணி அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 1.00 இலட்சம் மதிப்பில் மண்புழு உரக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 1.55 இலட்சம் பெருவளப்பூர் சாலையில் Staggred Trench அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 6.15 இலட்சம் மதிப்பில் பெருவளப்பூர் சாலையில் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டுள்ளதையும், முதலமைச்சரின் சோலார் விளக்குடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.10 இலட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கட்டப்பட்டுள்ளதையும், ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூபாய் 1.55 இலட்சம் மதிப்பில் மந்தைவெளி குட்டை அருகில் புதிய மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

பெருவளப்பூர் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.57 இலட்சம் மதிப்பில் தட்டான் ஏரி அருகில் Continuous Trench அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 2.16 இலட்சம் மதிப்பில் தட்டான் ஏரி அருகில் Staggred  Trench அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 2.76 இலட்சம் மதிப்பில் தட்டான் ஏரி அருகில் நிலம் சமப்படுத்தப்பட்டுள்ளதையும் Landleveling, ரூபாய் 4.10 இலட்சம் மதிப்பில் தட்டான் ஏரி அருகில் மரத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதையும், பார்வையிட்டார்.

2
4

வந்தலைக் கூடலூர் கிராம ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 17.00 இலட்சம் செலவில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், கனிமவள அறக்கட்டளை நிதி ரூபாய் 10.00 இலட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

பி.சங்கேந்தி கிராம ஊராட்சியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 68.55 இலட்சம் மதிப்பில் என் சங்கேந்தி முதல் பி.சங்கேந்தி வரை தார்சாலை அமைக்கப்பட்டு வருவதையும், செயல்படா சேமிப்பு கணக்கு நிதியிலிருந்து ரூபாய் 48.80 இலட்சம் மதிப்பில் பி.சங்கேந்தி முதல் குமுளுர் வரை தார்சாலை அமைக்கப்பட்டு வருவதையும், கனிமவள அறக்கட்டளை நிதியிலிருந்து ரூபாய் 10.00 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் 20 பணிகள் ரூபாய் 1.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு இப்பணிகள் அனைத்தும் தரமானதாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இலால்குடி வட்டம், பம்பரம்சுத்தி, வடக்கு அய்யன் வாய்க்கால் குறுக்கே ரூபாய் 30.00 இலட்சம் மதிப்பீட்டில் படுகை அணை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், வடக்கு அய்யன் வாய்க்கால் குறுக்கே ரூபாய் 28.00 இலட்சம் மதிப்பீட்டில் சவுக்கடி படுகை அணை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பணிகள் அனைத்தும் தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும். மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினாh

ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.செல்வம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.