திருச்சி – பழமையும் புதுமையும் சந்திக்கும் இடம்!

0
D1

திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி தெற்கு இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  இது தமிழ் நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும் நகர்புற குழுமமாகவும் இருக்கிறது. இடத்தின் பெயர் தோற்றம் பற்றி பல்வேறு  சிந்தனைகள் உலா வருகின்றன.  திருச்சிராப்பள்ளி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான ‘த்ரிஷிராபுரம்’ என்ற சொல்லில் இருந்து வருகிறது. இந்த வார்த்தையில் உள்ள ‘திரிஷ்ரா’ என்றால் “மூன்று தலைகள்” என்றும் ‘பள்ளி’ அல்லது ‘புரம்’ என்றால் நகரம் என்றும் பொருள்படுகிறது.

 

இந்நகருக்கு அருகில் மூன்று தலை அரக்கன் திரிஷ்ரா இறைவன் சிவனிடம் வேண்டி வரங்களை பெற்றுகொண்டான் என்று கூறப்படுகிறது. தெலுங்கு அறிஞர் சி. பி பிரவுன் திருச்சிராப்பள்ளி சிறிய நகரம் என்று பொருள் படும் ‘சிறுட்டா-பள்ளி’ என்று வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பினார். 16 ஆம் நூற்றாண்டில் கிடைத்த ஒரு பாறையில் உள்ள கல்வெட்டில்  திருச்சிராப்பள்ளியை ‘திரு-சிள்ள-பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ‘புனித-மலை-நகரம்’ என்று பொருள். சில அறிஞர்கள்  இந்நகரத்தின் பெயரானது சிறிய புனித நகரம் என்று பொருள்படும் ‘திரு-சின்ன-பள்ளி’ என்ற பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

 

சென்னை சொற்களஞ்சியத்தின் படி திருச்சிராப்பள்ளி என்ற வார்த்தையானது ‘திருச்சினாப்பள்ளி’ என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது புனித(திரு) கிராமம்(பள்ளி) உடைய ஷினா பள்ளி என்பதாக பொருள் படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சிரப்பள்ளி திருச்சினாப்போளி என்று அழைக்கப்பட்டு வந்தது. இது சுருக்கமாக திருச்சி என்று பின்னர் அழைக்கப்படலானது.

 

D2

வரலாற்றின் பக்கங்களில் இருந்து…

 

திருச்சி நகரம் தமிழ்நாட்டின் பழமையான வசிப்பிடங்களில் ஒன்றாகும். இது ஒரு வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது மற்றும் பல பேரரசுகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. முந்தைய குடியேற்றங்கள் கிமு 2 ஆம் ஆண்டில் இருந்ததை அறிய முடிகிறது. ஆரம்ப சோழ அரசர்கள் கிமு 3 வது நூற்றாண்டில் இந்த இடத்தை ஆட்சி செய்தனர். இடைக்கால காலத்தில் கி.பி  6 ஆம் நூற்றாண்டில்  இந்நகரம் பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் ஆட்சி செய்து மலைக்கோட்டையில் பல குகை கோயில்களை கட்டினார். பல்லவர்களுக்கு பின் இடைக்கால சோழர்கள் திருச்சியை வெற்றி கொண்டு கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். சோழர்கள் வீழ்ச்சிக்கு பிறகு மாலிக் கபூரால் தோற்கடிக்கப்படும் வரை  பாண்டியர்கள் 1216 முதல் 1311 வரை  ஆட்சி நடத்தினர்.

 

பிறகு 1311 முதல் 1378 வரை தில்லி மற்றும் மதுரை சார்ந்த சுல்தான்கள் ஆட்சி இருந்தது. சுல்தான்களுக்கு பிறகு, விஜயநகர பேரரசின் கீழ் இப்பிராந்தியம் வந்தது. திருச்சியை  1736 வரை விஜயநகர பேரரசு மற்றும் மதுரை நாயக்கரின் பேரரசு ஆட்சி புரிந்தனர். மதுரை நாயக்கர் ஆட்சியாளர் மீனாட்சி தற்கொலை செய்து கொண்ட பின்னர் 1736 முதல் 1741 வரை சந்திரா சாஹிப் ஆட்சி செய்தார். சந்திரா சாஹிப் மராட்டியர்களால் சிறைபிடிக்கப்பட்ட பிறகு ஜெனரல் முராரி ராவ் 1741 முதல் 1743 முதல் ஆட்சி செய்தார். பின்னர் இது கர்நாடக ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டது. எனினும் கர்நாடக நவாப் 1751 ம் ஆண்டு சந்திரா சாஹிப்பால் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரம் ஆங்கிலேயர் மற்றும் கர்நாடக நவாப் வாலாஜா முகமத் அலி கான் ஆகியோருக்கும் சந்திரா சாஹிப் மற்றும் பிரஞ்சு படையினருக்குமான இரண்டாவது கர்நாடக போர் ஏற்பட்டது. இதில் ஆங்கிலேயர் வெற்றிபெற்று வாலாஜா முகமத் அலி கான் வசம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. 1801 ல் ஆங்கிலேயர் இந்த  கர்நாடக ராஜ்ஜியத்தை கைப்பற்றி சென்னை மாகாணத்துடன் இணைத்து கொண்டனர். பிரிட்டிஷ் ஆட்சியின் போது, திருச்சி பெரிய மற்றும் மிக பிரபலமான நகரங்களில் ஒன்றாக உருவானது.

 

N2

திருச்சியை சுற்றி உள்ள கண்கவர் இடங்கள்

 

வளமான கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் திருச்சியை மிகவும் உன்னதமான வரலாற்று, சமய இடங்கள் நிறைந்ததாகவும்  மலை கோட்டை நகரமாகவும் உருவாக்கியுள்ளது. விராலிமலை முருகன் கோயில், மலைகோட்டை கோயில், ஸ்ரீ ரங்க நாதசுவாமி கோயில், ஜம்புகேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், எறும்பீஸ்வரர் கோயில், வயலூர் முருகன் கோயில், வெக்காளியம்மன் கோயில், குணசீலம் விஷ்ணு கோயில் நாதிர் ஷா மசூதி, புனித யோவான் தேவாலம் மற்றும் புனித ஜோசப் தேவாலயம் முதலானவை இந்த வளமான வரலாற்றின் படைப்புகள் ஆகும். அத்துடன் நவாப் அரண்மனை மற்றும் கல்லணை அணக்கட்டு மற்றூம் முக்கொம்பு அணை முதலியன திருச்சியின் முக்கியவத்தும் நிறைந்த பழமையான கட்டமைப்புகள் ஆகும். பல்வேறு திருவிழாக்களான பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, வைகுண்ட ஏகாதசி,  நவராத்திரி, பக்ரீத் , ஸ்ரீரங்கம் கார் திருவிழா, தீபாவளி மற்றும் பண்டிகைகள் மிகவும் ஆடம்பரமாகவும் புகழ் நிறைந்தும் கொண்டாடப்படுகின்றன. இவை இப்பகுதிக்கு ஒரு ஈர்ப்பை அளிக்கிறது. உள்ளூர் கைவினை பொருட்கள் மற்றும் நகைகள் இந் நகரத்தில் ஒரு நல்ல ஷாப்பிங் அனுபவத்தை கொடுப்பதால் இந்த இடம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக காட்சி தருகிறது.

 

 

திருச்சிக்கு பயணம்

 

திருச்சி விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாகும். இது சென்னை, பெங்களூர், இலங்கை மற்றும் கோலாலம்பூர் விமான நிலையங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி 45, NH 45B, 67, 210 மற்றும் 227  தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான பேருந்துகள் திருச்சியில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்படுகின்றன. திருச்சி ரயில் நிலையம் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய ரயில் சந்திப்பாக உள்ளது.

 

அதோடு நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்துடனும் நல்ல ரயில் இணைப்பை பெற்றுள்ளது. திருச்சியின் வானிலை ஆண்டின் பெரும்பாலான பகுதிகளிலும் சூடாகவும் வறண்டும் காணப்படுகிறது. கோடைகாலம் பகலில் மிகவும் சூடாக இருக்கும் ஆனால் மாலை போது சற்று குளிர்ச்சியாக காணப்படும். பருவ மழை நன்கு பெய்கிறது, இதன் காரணமாக வெப்பநிலை தணிந்து ஒரு பெரிய அளவிற்கு குளிர்ச்சியை தருகிறது. திருச்சியில் குளிர்காலம் குளிர்ச்சியாகவும் இனிமையானதாகவும் உள்ளது. ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் இடையே குளிர்கால மாதங்களில்  நகரத்திற்கு வருகை தருதல் மிக சிறந்த நேரமாகும்.

NativePlanet

N3

Leave A Reply

Your email address will not be published.