தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

0
Full Page

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 27.07.2019 அன்று ஜமால் முகமது கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Half page

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 27.07.2019 (சனிக்கிழமை) அன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரி TVS Tollgate திருச்சியில் நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் 5000-க்கும் மேற்பட்ட வேலைநாடுனர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்கள் தேர்வு செய்ய ஏதுவாக தாங்கள் வருகையை உறுதிபடுத்தும் வகையில் addeotrichy@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு வருகின்ற 22.07.2019 தேதிக்குள் உறுதி செய்யுமாறும், காலிப்பணியிட விவரத்தினை (பணியின் பெயர், தேவைப்படும் நபர்கள்(ஆண்/பெண் வாரியாக), கல்வித்தகுதி, பணிபுரியும் இடம், ஊதியம் மற்றும் மின்னஞ்சல் முகவரி) போன்ற விவரங்களை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.