லால்குடி அடுத்த ரெட்டிமாங்குடியில் கலெக்டர் ஆய்வு

0

லால்குடி அடுத்த ரெட்டிமாங்குடியில் திருச்சி கலெக்டர் ஆய்வு பொது மக்களிடம் குறை கேட்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் ரெட்டிமாங்குடியில் 100 நாள் வேலை மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் சமையல் கூடம் மற்றும் கட்டிட வேலைகளை  கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

food

பிறகு அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் மனூகளை வாங்கி குறைகளை கேட்டார். அப்போது ரெட்டிமாங்குடியில் உள்ள தந்தை ஆற்றை தூர்வாரி 6 இடங்களில் தடுப்பணை கட்டிதரவேண்டி 2018 ல் ஆட்சியரிடம் மனுகெடுத்தும் இது நாள்வரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறினார்கள்.

இம்மனுபற்றி புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க  கூறினார். பிறகு ரெட்டிமாங்குடியில் 60 -க்கும் மேற்பட்டவர்ருக்கு பக்கவாதம் இருக்கின்றது. அதற்கு ஆட்சியர் பக்கவாதம் உள்ளவர்களிடம் அவர்களின் ஆதார் அட்டை களை வாங்கி திங்கள் அன்று கொடுத்தால், அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து  பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் இடுகாட்டிற்கு சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறினார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் பொறியாளர்  மற்றும் ரெட்டிமாங்குடி ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்

gif 4

Leave A Reply

Your email address will not be published.