துறையூரில் குடிநீருக்காக கிராம மக்கள் சாலை மறியல்

0
1

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள திருமானூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திருமானூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.