லால்குடி அருகே  விபத்தில் சிக்கி புது மாப்பிள்ளை பலி,  புதுமணப்பெண் உயிர் ஊசல்

0

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த மாந்துரை நெருஞ்சலகுடி வடக்கு தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் மோகன் (வயது 25) இவருக்கும் திருச்சி மாவட்டம் வயலூர் அருகே முள்ளுகுரும்பூரை சேர்ந்த ரமணா (வயது23) இவருக்கும் கடந்த 15ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது.இவர்கள் மூன்றாம் வழி விருந்து முடித்து கணவர் வீட்டுக்கு திரும்பிய போது நெ.1 டோல்கேட் கிழக்கே கீழ வாளாடி அருகே புது மாப்பிளையின் தோழன் ரஞ்ஜித் டூவிலரை ஓட்டி உள்ளான்  மோகன் மற்றும் அவன் மனைவி  இருவரும் பின்சீட்டில் அமர்ந்திருந்தனர்.

food

அப்போது லால்குடி வழியாக திருச்சியை நோக்கி வந்த லாரி இவர்கள் வந்த
இருசக்கர வாகனத்தின்மீது நேருக்கு நேர் மோதியதில் மோகன் மற்றும் அவன் நண்பர் ரஞ்சித் ஆகிய  இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மோகன் மனைவி பலத்த காயம் அடைந்ததால் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்து வந்த சமயபுரம் காவல்
துறையினர் சடலங்களை கைப்பற்றி லால்குடி அரசு மருந்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்

gif 4

Leave A Reply

Your email address will not be published.