நல்லவேளை உயிர் பலி இல்லை

0

நல்லவேளை உயிர் பலி இல்லை

 

வா நண்பா என்ன இந்த வாரம் பொழுது சாஞ்சு வந்திருக்க… ஏன் இவ்வளவு லேட்….

லீவு முடிஞ்சி ஸ்கூல் திறந்துட்டாங்க… அதா இந்த வாரம் லேட்….

ஓ…..அப்படியா?

ம்…ம்…. சரி…… இந்த வாரம் முழுவதும் பேஸ் புக்ல  நீதான் மெயின் டாப்பிக் தெரியுமா….

ஏன்.. என்ன ஆச்சு……

சமீபத்துல வந்த மழைல நீதிமன்ற சாலைய ஒட்டி உன் மேல கட்டியிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துருச்சில அந்த வீடியோ தான் ஹாட்…

ஓ… அதுவா..  புதுமை முயற்சிகள் திட்டத்தின்கீழ் திருச்சி தென்னூர் அண்ணாநகர்ல இருந்து எம்.ஜி.ஆர் சிலை வரைக்கு என்னோட கரையில ரூ.85 லட்சம் செலவுல பசுமை பாதைகள் போட்டாங்க, அப்புறம் திருப்பவும் ரூ.44.98 லட்சத்துல விரிவாக்கப்பணிகள்னு என்னோட கரைல தடுப்புச்சுவர், திறந்தவெளி உடற்பயிற்சி மையம்னு எல்லா அமைச்சாங்க. அப்புறம் அவசர அவசரமா வேலைய முழுச முடிக்காம அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி எல்லம் வந்து  திறந்து வச்சாங்க….. கட்டி முடிச்சு 40 நாள் கூட ஆகல அதுக்குல்ல சாதாரண மழைக்கே இடிஞ்சு போச்சு, இதுல இருந்தே அவங்களோட கட்டுமானம் இவ்வளவு தான் தரம்னு  தெரிஞ்சிபோச்சி. இப்போதைக்கு அதிகாரிகள பணிநீக்கம் செஞ்சு என்ன பண்ண. கட்டுமானம் சரிந்ததால் வலி எனக்குதான், ஏதும் உயிர் பலி இல்ல. ஆனா, ஏதேனும் உயிர் பலி இருந்தா… என்ன செய்யுறது.

food

1,000 வருசத்துக்கு முன்னாடி என்ன உருவாக்குன என்னோட மன்னன் இராஜராஜசோழனால் கட்டப்பட்ட எதுவும் இதுவரை ஒரு அங்குலம் கூட மாறுபடல…. ஆனா இன்னைக்கி…  இதெல்லாம் எனக்கு பழகிப்போச்சு…  பொதுவா வாய்க்கால் கட்டுமானங்கறது கடமையாகவும், வேலையா மட்டும் பாக்காம உணர்வாகவும் பாக்கனும். அப்ப தான், இந்த வேலைய ஒழுங்க செய்யமுடியும்.

எந்த ஒரு பகுதியின் வளர்ச்சியிலும் தண்ணீரின் முக்கியத்துவங்கறது இன்றியமையாதது, அதனால் தான் வள்ளுவ  பெருமகான் அன்றே நீரின்றி அமையாது உலகுன்னு சொல்லி வச்சார். திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் என்னை வச்சுதான் முன்னேறியதுன்றது மட்டும் நிதர்சனமான உண்மை. அத இங்க யாரும் மறுக்கவும், மறக்கவும் மாட்டாங்க…. ஏன்னா… என்னோட உருவாக்குதலின் பயனும் அதுவே. கர்நாடகத்துல இருந்து என் அன்னை காவிரிக்கு ஒழுங்கா தண்ணீர் வராத்ததுக்கு பிறகே என்னுடைய நிலைமை இவ்வாறு மாறியது. நான் மட்டுமல்ல இன்று காவிரியில் இருந்து பிறக்கும் பல்வேறு கிளைவாய்க்கால்களின் நிலைமையும் இதுதான். முப்போகம் விளைய வைத்த என்னால் ஒரு போகம் கூட விளைய வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், என்னை முதலில் கைவிட்டவர்கள் விவசாயிகளே. அதன் தொடர்ச்சியாக பருவமழையும் முறையாக பெய்யாத காரணத்தினால், தண்ணீர் வரத்து என்பது சுத்தமாக குறையும் நிலை ஏற்பட்டது. இதன் தாக்கமாக தமிழகம் முழுவதிலும் பல குளங்கள், ஏரிகள் காணாமல் போயின. அந்த வரிசையில் நானும் சேர்ந்திருப்பேன். ஆனால், திருச்சியின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றார்போல், திருச்சியின் கட்டிட வடிவமைப்புகள், இடமாற்றங்கள் ஏற்பட்டனவே தவிர, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் முன்னேற்றம் காணமுடியவில்லை. அதன் ஒரு பகுதியாகவே சாக்கடை கழிவுகளை என்னை சுமக்கச் செய்தனர். அதனாலேயே என்னுடைய உயிரோட்டம் கழிவாய் இன்னும் நகரத்தை சுற்றிவருகிறது.

கொஞ்ச காலம் முன்னாடி வரைக்கு திருச்சி நகருக்குள்ள இருந்து தமிழகம் மட்டும் இல்லாம அண்டை மாநிலங்களுக்கு நெல், வாழை, வெற்றிலைன்னு ஏற்றுமதி செஞ்சிட்டு இருந்தாங்க. இன்னமும் திருச்சி நகரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் என்னை நம்பி விவசாயம் செய்றவங்களும் இருக்காங்க…. இருந்தாலும் பழைய உற்பத்தியுடன் ஒப்பிட்டு பாக்கறப்போ இன்னைக்கெல்லாம் அது  ஒன்னுமே இல்ல… நமக்கான தண்ணீரை கர்நாடகத்தில் இருந்து நாம் பெறாத வரைக்கும் இந்த நிலைமையில் இருந்து மீள்வது கடினம் தான். அது மட்டுமில்லாம இயற்கையா பார்த்து நமக்கு கொடுக்கற தண்ணீரையும் ரோட்ல விட்டுட்டு வேடிக்கை தான் பார்க்கிறோம். பத்தாதுக்கு, அதிக மழை பெய்தால் தண்ணீரை அப்புறப்படுத்தும் அவசர நடவடிக்கையை மேற்கொள்கிறோம் என்கிறீர்கள். யாருக்காக இந்த அவசர நடவடிக்கை இன்றைய “மழைநீர் நாளைய உயிர் நீர்” என்ற பதாகைகள் வைத்தால் மட்டும் போதுமா அதற்கான செயல்முறை என்ன? இவை எடுக்கும் இவர்களிடம் பதில் கிடையாது. தண்ணீரை பாதுகாக்காமல் இங்கு ஒரு தொழிலும் கிடையாது.

இதை மக்கள் புரிஞ்சி கிட்டாங்களோ இல்லையோ அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சரியாக புரிஞ்சிக்கிட்டாங்க… ஏன்னா.  என்ன வச்சி அரசியல் செய்ய அரசியல்வாதிகளும் மறக்கிறதில்ல, அதிகாரிகளும் தவறுவதில்ல.

தண்ணீய பணோ கொடுத்து வாங்கு நிலைமைக்கு எல்லாரு வந்துட்டோ. இதற்கு பலகாரணங்கள் இருந்தாலும், நாம் தொலைத்த குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்டவைகளும் இதற்கு முக்கியமாக காரணம், தெரிந்தோ தெரியாமலோ என்னை இந்த திருச்சிவாசிகள் தொலைக்காமல் இன்னம் ஞாபகம் வைத்துள்ளனர்.  அதற்கான, காரணம் 1,000ஆண்டுகளுக்கு முன்னர் என்னை உருவாக்க கஷ்டப்பட்ட அவங்க முன்னோர்களின் உழைப்பு, நம் சந்ததியினர் நலமுடன் இருக்க வேண்டும் என்ற அவர்களின் உணர்வு. எனக்கு நீங்க ஆயிரம் துரோகம் செய்தாலும், உங்கள மன்னிச்சு பாசம் காட்டிக்கிட்டு இருக்கேன்.

எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கு என்ன உருவாக்கின என் மன்னன் இராஜராஜசோழனின் நோக்கத்தையும்,

ஆயிரம் ஆயிரம் மக்களின் உணர்வையும் மீட்டெடுக்க திருச்சிவாசிகள் வெகுண்டெழுவார்கள்.

ஏன்னா? எந்த பிரச்சனைக்கும் போராட்டமே தீர்வாகும். என்னுடைய இந்த குமுறல உன்ன மாதிரி படிக்கும் மாணவர்கள்1 தெரிஞ்சிக்கனும், உங்களுடைய எதிர்காலம் மட்டும் அல்ல, என்னுடைய எதிர்காலமும் உங்க கையில தான் இருக்கிறது.

சரி…. ரொம்ப நேரம் பேசிட்டோம்…. நீயும் சென்று படிக்குற வேலைய பாரு…. அடுத்த கோடைகாலத்துல… பார்ப்போம்… அப்போது… உனக்கு என்னுடைய புதிய கதை காத்திருக்கும்…. திருச்சி வாசிகளின் பங்களிப்புடன்… நன்றி…

gif 4

Leave A Reply

Your email address will not be published.