கைவிட்ட விவசாயிகள்

0
1

கைவிட்ட விவசாயிகள்

வா நண்பா,  என்ன வரும் வழியில நல்ல மழையா? சட்டை எல்லாம் ஈரமாக இருக்கு….

ஆமா. எங்க ஏரியால எல்லாம் செம மழை. இப்போதான் கொஞ்சம் நின்னுசு அதான் வந்தே….

4

ஓ…சரி…சரி…

ஆமா….. மறுபடியும் உன்னை சுத்தம் செய்ய 1 கோடியே 17லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கி இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன் உண்மையா…..

அப்படித்தா நானும் கேள்விப்பட்டேன். இதுல எவ்வளவு எனக்கு எவ்வளவு மத்தவங்களுக்குனு தெரியல…………

2

விவசாயப்பாசனத்துக்கு நீ பயன்படனும் அப்புடிங்கறதுக்காகத்தா  தூர்வாரும் பணிய செய்யப்போறாங்கன்னு நினைக்கிறே….

விவசாயத்துக்காகவா! விவசாயிகள் எல்லாம் என்னை ஞாபகம் வைச்சு இருக்காங்கலானே தெரில…. இதுல அவங்களுக்காக தூர்வார்ராங்கன்னு சொல்லற நீ வேற….

ஏன்? அவங்க உனக்காக ஒன்னுமே பண்ணலயா நீ உருவாக்கப்பட்டதே அவங்களுக்காகத் தானே?

ஆமா…. ஆனா அவங்களுக்கு அது புரியலயே அப்படி புரிஞ்சிரிந்தா என்மேலே ஒரு நகரத்தோடா சாக்கடையே போகுதே. அத தடுத்திருக்க மாட்டாங்களா. இது வரைக்கும் அதுக்காக பெரிய அளவில் ஒரு போராட்டம் பண்ணியிருப்பாங்களா. அதுக்காக எல்லாத்தையும் நான் குறைகூறல ஒரிருவர் இருக்காங்க. என்ன காப்பாத்தி பராமரிக்கனுங்கற முனைப்போட. அந்த மாதிரி சில நாட்களுக்கு முன்பு அல்லித்துறையில வந்து போராட்டம் பன்னவருதான். மாநில விவசாயிகள் சங்கத்தலைவர் ம.ப. சின்னத்துரை, என்னடா!  ஒரு விவசாயிக்கு என் மீது இவ்வளவு அக்கறை வந்துருச்சேன்னு அவரிடம் இது குறித்து பேசினேன்.

பெட்டாவாய்த்தலையில் இருந்து வாளவந்தான் கோட்டை வரைக்கு உன்னை தூர்வார வேண்டும்னுதா நான் அல்லித்துறையில நீ செல்கிற வழியிலேயே போராட்டம் பண்னேன்.  ஆத்துல மழை பெஞ்சு தண்ணீர் போறப்போ தூர்வாரி என்ன புரோசனம். கோடைகாலத்திலேயே முறையா தூர்வாரினாத் தானே மழைக்காலத்துல எந்த தடையுமின்றி உன்னால் முழுஅளவு தூரத்தையும் கடந்து எல்லா விவசாயிகளுக்கும் பயனளிக்கமுடியும். அப்புடினு சொன்னாரு. ஒரு விவசாயிக்காக இன்னொரு விவசாயி போராடரத பாத்தே ரொம்ப நாள் ஆச்சு. அது பத்தி இன்னும் அவரிடம் பேசனும்போல் இருந்துச்சி, அதுனால தொடர்ந்து பேச்சு கொடுத்தேன். அப்போ அவரு  மேட்டூர்ல தண்ணீ திறந்து விட்டதுக்கு அப்புறம் அவசர அவசரமா உன்னை தூர்வாரச்சொல்லி சொல்லுவாங்க… இதை பயன்படுத்தி கொள்ளும் அரசாங்க அதிகாரிகளோ தூர்வாருகிறேன் அப்புடின்ற பேருல பணத்தை கொள்ளை அடிச்சிட்டு போய்டுவாங்க… இது விவசாயிகளும் ஒரு காரணம் தான் எப்போ போராடனுமோ அப்போ போராடாம விட்டுட்டு, தவறான நேரத்துல போராடி மொத்தப்பணத்தையும் கொள்ளையடிச்சிட்டு போறதுக்கு நாமலே வாய்ப்ப ஏற்படுத்தி தறோம்.

சமூக அக்கறைங்கறது அரசியல் வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ, மக்களுக்கோ  கொஞ்சம் கூட இல்ல அதுனால தான் நகரம் முழுவதிலும் வருகிற சாக்கடைய உன்ன சுமக்க வைக்கிறாங்க… அவ்வளவு ஏன் உனக்காக நான் போராடிய அல்லித்துறைல கூட நீ சுமந்து கொண்டிருந்த கழிவுகளுக்கு மத்தியில் தான், நான் போராட்டம் செய்யவேண்டிய சூழ்நிலை.  அப்புடினு சொல்லும்போதே அவரோட குரல்ல அவ்வளவு கோபம்.  அதுமட்டுமில்ல உன்ன வச்சி எத்தனை விவசாயிங்க கொள்ளையடிக்கறாங்க தெரியுமான்னு வேற கேட்டாரு….. அதகேட்டது எனக்கு ஒரே குழப்பம், என்ன வச்சி இவங்க என்னடா கொள்ளையடிக்கறாங்கன்னு…. அப்போ அவரு சொன்னாரு…. என்னை தூர்வார வேண்டும்னு போராட்டம் பண்ணுவாங்க, பிறகு அரசு தூர்வார நிதி ஒதுக்கி, ஒப்பந்ததாரரிடம் விட்டுருவாங்க…. போராடுனா விவசாயிங்கள அவங்களோட தலைவரை கூப்டுகிட்டு அந்த ஒப்பந்ததாரரைப்பார்ந்து, நாங்கதா போராட்டம் பண்ணினோம். தூர்வாரும் பணி வந்ததற்கே நாங்கள் தான் காரணம்  என்று கூறி பணம் வாங்கிகொண்டு சமரசம் செய்து கொள்வார்கள்.  உண்மையிலேயே அடுத்த தலைமுறைக்கு சோரையும், நீரையும் கொண்டு செல்லனுங்கற அக்கறை, டெல்டா விவசாயிங்க கிட்ட கொறைஞ்சிகிட்டே வருது. தூத்துக்குடில ஸ்டெர்லைட் ஆலைய எதிர்த்து எவ்வளவு பேர் போராடறாங்க…. அப்புடிங்கறப்போ டெல்டா பகுதி விவசாயிங்க எல்லா சேந்து தண்ணீக்காக எப்படி போராடனு. அந்த முக்கித்துவத்த இங்க இருக்கற விவசாயிங்க உணர மறுக்கறாங்க அதுதா உண்மையிலேயே வேதனையளிக்கும் விஷயமாக இருக்குன்னு சொன்னாரு. அவரு என்கிட்ட பேசுனப்போ அவரோட குரல்ல அவ்வளவு கோபம்… அப்போ நா நினைச்சது என்னன்னா இந்த கோபம் எல்லா விவசாயிகளுக்கும் இருக்கவேண்டிய  ஒன்று அல்லவா. அவங்களுக்காகத் தானே நான் உருவாக்கப்பட்டேன். என்னை நகர வாசிகள் படுத்தும் பாட்டிற்கு, இன்னேரம் என்னால் பயனடைந்தவர்கள் கொந்தளித்திருக்க வேண்டாமா…. அதைவிட்டு விட்டு என்னை காக்க, போராட வெளியில் இருந்து ஆட்கள் வரவேண்டும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். போராட்டமே எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையும். அது சுயலாபத்திற்காக அல்லாமல் பொது நலனுக்காக பயன்பெறும் மக்களின் கூட்டுப்போராட்டமாக இருக்கவேண்டும். இவையனைத்தையும் தாண்டி அது உரிய காலத்தில் நடைபெற வேண்டும்.

சரி. மீண்டும் மழைவர மாதிரி இருக்கு. நீ அதுக்குள்ள வீட்டுக்கு போய்ரு. அடுத்த வாரம் பார்க்கலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்