இந்தியாவிலேயே முதன் முறையாக ஏ ப்ளஸ் ப்ளஸ் தர மதிப்பீட்டை பெற்ற புனித வளனார் கல்லூரி!

0

இந்தியாவிலேயே முதன் முறையாக ப்ளஸ் ப்ளஸ் தர மதிப்பீட்டை பெற்ற புனித வளனார் கல்லூரி!

175 ஆண்டுகள் பழமை வாய்ந்தது திருச்சி தூய வளனார் கல்லூரி. இக்கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, எழுத்தாளர் சுஜாதா, சினிமா இயக்குனர் பிரபு சாலமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இக்கல்லூரியில் பயின்று உள்ளனர்.

‌சந்தா 1

இக்கல்லூரிக்கு கடந்த 2000ஆம் ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழுவினால் ப்ளஸ் தகுதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கடந்த ஜுன் மாதம் இக்கல்லூரியின் மனிதவளம், கட்டமைப்பு, நிதிவளங்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு நடத்தியது.

சந்தா 2

இந்த ஆய்வின் அடிப்படையில் இக்கல்லூரிக்கு ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து வழங்கி உள்ளது. இந்தியாவிலேயே ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து பெற்ற முதல் தன்னாட்சி கல்லூரி என்ற பெருமையை திருச்சி தூய வளனார் கல்லூரி பெற்றுள்ளது.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் கூறும்போது. 175ஆம் ஆண்டு இக்கல்லூரி கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நிலையில் எங்கள் கல்லூரியில் புதிதாக சட்டப்பள்ளி அமைப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம்.

திருச்சி தூய வளனார் கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு குழு அமைத்து உள்ளோம். மேலும் மக்களை சார்ந்த ஆய்வுகள் பல நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த ப்ளஸ் ப்ளஸ் தகுதியை இந்தியாவிலேயே முதல் முறையாக நாங்கள் பெற்றிருப்பதால் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். அரசு அதிக நிதி உதவி செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.