லால்குடியில் பசுமை மாரத்தான்

0
1 full

லால்குடியில் நீர்நிலைகளை பாதுகாத்திட வலியுறுத்தி பசுமை மாரத்தான்

நடைபெற்றது.

மாரத்தானை லால்குடி முன்னாள் கோட்டாட்சியரும் திருச்சி மாவட்ட ஆய்வு குழு தலைவருமான பாலாஜி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தானது லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் தொடங்கி பூவாளுர், பின்னவாசல், மார்கெட்,  அகலங்கநல்லூர், திருமங்கலம் வழியாக அதே பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற 10கிலோ மீட்டர் ஓட்டத்தில் சேலத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் முதலிடத்தையும், கென்யாவை சேர்ந்த பீட்டர் என்பவர் இரண்டாமிடத்தையும், சேலத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் 3-ம் இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் நடைபெற்ற 5கிலோ மீட்டர் ஓட்டத்தில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஆஷா முதலிடமும், நாமக்கல்லை சேர்ந்த  கிருத்திகா   2-ம்இடமும்,  தன்யா என்பவர் 3-ம்இடமும் பிடித்தனர். சிறுவர்கள் பிரிவில் நடைபெற்ற ஓட்டத்தில் திருச்சியை சேர்ந்த மதுபாலன் முதலிடமும், சிவகாசியை சேர்ந்த வேல்முருகன் 2-ம்இடமும், திருச்சி பிரகாஷ் என்பவர் 3-ம் இடமும் பிடித்தனர்.

2 full

அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்சி மாநகர காவல் இணை ஆணையர் மயில்வாகனன் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் லால்குடி காவல் ஆய்வாளர் முத்துகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார், டால்மியா சிமெண்ட் சமூக திட்ட அலுவலர் சந்தாணகிருஷ்ணன், மருத்துவர் சித்ரா தொழிலதிபர்கள் அருணாசிவா, பழனிசாமி, கார்த்திக், ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாரத்தான் ஏற்பாடுகளை பசுமை பூவை இளைஞர்கள்,ஷியாம் சுந்தர், ளுவுகொரியர்.செந்தில்,லியோ,சைமன்ஜெயராஜ்,செந்தில்குமரன்,அசோக்குமார், தச்சன்குறிச்சி சிவசாமி, திருமுருகன்,   தமிழ்தேசிய அக்னி சிறகுகள், இயற்கை விழுதுகள் ஆகிய அமைப்பைகள் செய்திருந்தன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை லால்குடி போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்.

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.