செப்புப் பாத்திர குடிநீர் குடிச்சு பாருங்க ! ஏன் தெரியுமா ?

0
1

செப்புப் பாத்திர குடிநீர்

திருச்சி புத்தூர் அமிர்தா யோக மந்திரம் பாடசாலை யோகா ஆசிரியர் விஜயகுமார் செப்பு பாத்திர குடிநீர் பற்றி கூறுகையில்

நம் முன்னோர்கள் செப்புப் பாத்திரத்தை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

2

கால சூழல் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றால் பல்வேறு உலோகங்கள் மாறி பிளாஸ்டிக் வரை மக்கள் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் பயன்படுத்துவோரை வெகுவாக பாதிக்கின்றது.

4

இதை உணர்ந்த மக்கள் குடிநீர் குடுவை சமையல் பாத்திரங்கள் உணவுப் பொருட்களை சேமிக்கும் பாத்திரங்கள் என செப்பு பாத்திரங்களை பயன்படுத்த துவங்கி விட்டார்கள்.

செப்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் குடிநீரை குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி அமில கார சமநிலையை பராமரிக்கும். ஏனென்றால் செப்பு நுண்ணிய ஊட்டச்சத்து கொண்டதாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செப்பு பாத்திரத்தில் மாலை நீரை ஊற்றி அதிகாலை பருகினால் அனைத்து பலன்களையும் பெறலாம்.

செப்பு பாத்திரத்தை கழுவுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். செப்புப் பாத்திரம் கழுவும் பொழுது சற்று நீரோடு எலுமிச்சம்பழம் சாறு கலந்து பாத்திரத்தை முழுமையாக கழுவுதல் முக்கியமாகும்.

3

Leave A Reply

Your email address will not be published.