காவேரி மருத்துவமனையின் புதிய தீப்புண் தீவிரச் சிகிச்சைப் பிரிவு

0
full

தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள காவேரி மருத்துவமனை

தென்னூரில் தீப்புண் தீவிரச் சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்தது

15 ஜூலை, 2019, திருச்சி: தென்னிந்தியாவின் முன்னணி பல்நோக்குச் சிறப்பு மற்றும் மூன்றாம் உயர்படிநிலை நலம்பேணும் மருத்துவமனை சங்கிலியான காவேரி மருத்துவமனை, இன்று (தேசிய ஒட்டறுவை மருத்துவ தினத்தில்) தென்னூரில் உள்ள தனது கட்டமைப்பு வசதியில் அதிநவீன தீப்புண் தீவிரச் சிகிச்சைப் பிரிவைத் (BICU) திறந்து வைத்தது. பேராசிரியர். ஜி. கார்த்திகேயன் எம்.எஸ்., எம்.சி.எச்.,  பேராசிரியர், கை மற்றும் உறுப்பு மறு சீரமைப்பு நுண்ணறுவைத் துறை, தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை மற்றும் டாக்டர். செங்குட்டுவன் காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் தீப்புண் தீவிரச் சிகிச்சைப் பிரிவை ஒட்டறுவை, உறுப்பு மறு சீரமைப்பு மற்றும் முக எலும்பியல் அறுவை மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர். ஜே. ஜகன்மோகன் எம்.எஸ்., எம்.சி.எச்., தொடங்கி வைத்தார்.

poster

தீப்புண்களுக்குச் சிகிச்சையளிப்பதில் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த ஒட்டறுவை மருத்துவர்களாலும்,  தீப்புண்கள் நலம் பேணலில் பயிற்சி பெற்றுள்ள செவிலியப் பணியாளர்களாலும், இருபத்திநான்கு மணி நேரமும் தீவிர சிகிச்சையை வழங்கும் காவேரி மருத்துவமனையில் நவீனக் கட்டமைப்பு வசதிகளும், நவீனத் தொழில்நுட்பங்களும் உள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை மருத்துவக் கல்லூரியின் ஒட்டறுவை, மீண்டும் உறுப்பு சீரமைப்பு மற்றும் முக எலும்பியல் அறுவை மருத்துவத் துறைத் தலைவர், பேராசிரியர் ஜே. ஜகன்மோகன் எம்.எஸ்., எம்.சி.எச்., “இதுபோன்ற ஒரு நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தீப்புண்களுக்காக ஒரு பிரத்யேகத் தீவிரச் சிகிச்சைப் பிரிவைக் கொண்டிருப்பதற்காக காவேரி மருத்துவமனையையும், மருத்துவர் குழுவையும் நான் மனமார வாழ்த்துகிறேன். உரிய நேரத்தில் நிபுணர் சிகிச்சையை வழங்குவதன் மூலம் தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவரின் தேவைகளை தீர்க்க முயற்சிப்பதில் அவர்கள் பேருதவியாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ”

ukr

பேராசிரியர். ஜி. கார்த்திகேயன் எம்.எஸ்., எம்.சி.எச்., பேராசிரியர், கை மற்றும் உறுப்பு மறு சீரமைப்பு நுண்ணறுவைத் துறை, தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை கூறியதாவது, “காவேரி மருத்துவமனையில் தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன சிகிச்சையை வழங்க மருத்துவத் தொழில்நெறிஞர்களின்  நிபுணர் குழு இருக்கிறது என்பது மட்டுமல்லாமல், நோயாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சிறந்த சிகிச்சைக் கட்டமைப்பு வசதியும் உள்ளது. காவேரி மருத்துவமனையின் முனைப்புத்திட்டம் மரணத்தை குறைப்பதிலும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் நிச்சயமாக பேருதவியாக இருக்கும்.”

“திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில், நோயாளிகளுக்கு நவீன நெருக்கடி நலம்பேணலை வழங்குவதற்கு, இப்போது நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை முழுமையாக உடனமைந்திருக்கின்றன. இது, தென்னூரில் வயது வந்தோருக்காக இரண்டு அலகுகளையும், கன்டோன்மென்ட்டில் குழந்தைகளுக்காக இரண்டு அலகுகளையும் கொண்டுள்ளது.  எங்கள் ஒட்டறுவைச் சிகிச்சைக் குழு உடனடி அறுத்துநீக்கல் மற்றும் பதியமிடல் நுட்பத்தை வழங்குவதன் காரணமாக, மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கிறது மற்றும் பெரிய தீப்புண்களைக் கொண்டிருப்பவர்களிடத்தில் நோயுறுகிற விகிதத்தையும் இறப்புறுகிற விகிதத்தையும் குறைக்கிறது. காவேரி  மருத்துவமனையில் ஒரு பிரத்யேக தீப்புண் தீவிரச் சிகிச்சைப் பிரிவு இருப்பதன் காரணமாக, எங்கள் குணமாக்கும் சிகிச்சைமுறையில் ஒரு முழுமையான மரபுவழி அணுகுமுறையின் மூலம் மேலதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்றும், மிகவும் கடினமான நேர்வுகளை மீட்க முடியும் என்றும், மீட்புக்குப் பிறகு அவர்களுக்கு தோலைச் சுற்றிலும் இறுக்கமாகப் பொருந்துகிற ஆடைகள், உடற்பயிற்சி மூலம் மறுசீரமைப்புச் சிகிச்சையளிப்பு மற்றும் ஆலோசனை வழங்கல் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு உதவ முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.” என்கிறார் காவேரி மருத்துவமனையின்  செயல் இயக்குநர் டாக்டர். செங்குட்டுவன்

“தீப்புண்கள் மிகவும் அழிவுகரமான பேரதிர்ச்சி வடிவங்களில் ஒன்றாகும். இதில், நோய்த்தொற்றையும் இறப்புறுகிற விகிதத்தையும் குறைக்க உடனடியாக நிபுணர் நலம்பேணல் தேவைப்படுகிறது. நோயாளிகள் நோய்த்தொற்று ஏற்படும் இடரைக் குறைக்க மிக உயர் தரமான நலம்பேணலைப் பெற வேண்டியதும், அவர்களுக்கு நீடித்திருக்கும் எந்தவொரு சேதத்தையும் குறைப்பதற்கான சிறந்த சாத்தியமுள்ள வாய்ப்பை வழங்க வேண்டியதும் இன்றியமையாததாகும். தீப்புண்ணின் கடுமையின் அளவு மற்றும் நீண்ட காலத் தேவைகள் பற்றிய அதிகரித்த ஒரு புரிதலுடன், இத்தகைய நோயாளிகளின் தேவைகளுக்கு போதுமான அளவில் தீர்வு காண முயற்சிக்க சிறப்பு தீப்புண் சிகிச்சைப் பிரிவுகள் தேவைப்பட்டு இருந்திருக்கும் என்று தெளிவாகியது. காவேரி மருத்துவமனையில், நோயாளிகளுக்கு முழுமையான மரபுவழியில் சிகிச்சையளிப்பதற்கு ஆழ்ந்த அறிவைக் கொண்ட நிபுணர்களின் முக்கிய குழு எங்களிடம் உள்ளது. ” என்று கூறினார், தென்னூர் காவேரி மருத்துவமனை, கிளைத்தலைவர், ஆர். அன்புச்செழியன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய, காவேரி  மருத்துவமனையின் ஒட்டறுவை துறைத்தலைவர் டாக்டர். எஸ். ஸ்கந்தா கூறுகையில், “ தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த குணமாக்கும் சிகிச்சைமுறையை அளிப்பதற்கு, காயம் ஏற்பட்ட பிறகு புண் இருக்கின்ற குறிப்பிட்ட இடத்திலும், முழு உடல் மண்டலத்திலும் ஏற்படும் நோய்க்குறியியலும் உடலியங்கியலும் ஒன்று சேர்ந்த மாற்றங்கள் குறித்து ஆழமான புரிதல் தேவைப்படுகிறது.  தீப்புண் உருவ அளவு மற்றும் ஆழம் பற்றிய துல்லியமான மதிப்பீடு, அத்துடன் உடனடி புத்துயிராக்கம் அளித்தல் ஆகியவை அத்தியாவசியமாகும்.  நல்ல தீப்புண் நலம்பேணல் என்பது சுத்தப்படுத்துதல், சிதைந்த திசு அகற்றப்படுதல் மற்றும் இரத்தத்தில் நுண்ணுயிர் நச்சேற்றத்தை தடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். தீப்புண் நோயாளிகளின் உயிர்பிழைப்புக்கும், மனிதனிடம் மருத்துவப் பலாபலன் அறியும் வருவிளைவுக்கும் காயம் ஆற்றுதல் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சிறந்த மறுசீரமைப்புச் சிகிச்சையளிப்பு என்பது அதிவிரைவான ஆற்றுதலை ஊக்குவித்து இருந்திருக்கும் என்பது மட்டுமல்லாமல், தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் மறுசீரமைப்புச் சிகிச்சையளிப்பாகவும் சிகிச்சையாகவும் செயல்பட்டு இருந்திருக்கும்.”

உயரளவு தீப்புண்கள் என்பன உயிர் பிழைத்தவர்களிடத்தில் இறுக்கங்கள், கூர்ந்துபார்க்கவேண்டிய தழும்புகள் மற்றும் விகாரமாய்த் தோற்றமளிக்கும் தழும்புகள் ஆகியவற்றின் காரணமாக இறப்புறுகிற விகிதம் மற்றும் நோயுறுகிற விகிதம் ஏற்படுவதற்கான ஒரு அதிகரித்த இடரை உள்ளடக்கியது ஆகும்.  உயரளவு தீப்புண்களை திறம்படக் கட்டுக்குள் வைத்திருப்பது என்பது ஒட்டறுவை மருத்துவத்தின் துணைச் சிறப்பு நிபுணத்துவத்தில் மிகவும் சவாலானவற்றுள் ஒன்றாகும். இது தீவிர சிகிச்சை, ஒழுங்கான இடைவெளிகளில் காயக்கட்டுக் கட்டுதல், வலியை திறம்பட கட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் தேவைக்கேற்ப தோல் பதியமிடல்கள் அல்லது பட்டைகள் இடுதல் உள்ளிட்ட  உறுப்பு சீரமைப்பு அறுவைச் சிகிச்சைகளை பல முறை செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

காவேரி மருத்துவமனை பல ஆண்டுகளாக நவீன தீப்புண் நலம்பேணலில் எப்போதும் முன்னணியில் உள்ளது. காவேரி மருத்துவமனை உலகளாவியச் செந்தரங்களுக்கு இணையாக தீப்புண்கள் நலம்பேணலுக்காக அணுகத்தகு மற்றும் மலிவு விலையில் செலுத்தத்தகு குணமாக்கும் சிகிச்சைமுறையை வழங்கும் நோக்கில், தற்போது திருச்சியில் தீப்புண்கள் தீவிர சிகிச்சைக்காக இரண்டு பிரத்யேக அலகுகளை, தென்னூர் மற்றும் கன்டோன்மென்ட் (குழந்தை தீப்புண்கள் நலம்பேணல்) ஆகிய இடங்களில் உள்ள தனது கட்டமைப்பு வசதிகளில் கொண்டுள்ளது.

half 1

Leave A Reply

Your email address will not be published.