ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோய் முழுவதும் குணப்படுத்தக்கூடியதே!

0
Business trichy

முந்தைய காலத்தில் புற்றுநோயினால் பாதிக்கபட்டவர்கள் மிக குறைவாக காணப்பட்டனர். ஆனால் இன்று 1.4 கோடிக்கும் மேலே பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உடலில் உள்ள செல்களில் ஏற்படும் இயல்புக்கு மாறான வளர்சியும், அதனை சுற்றியுள்ள திசுக்களின் பாதிப்பு, இதர உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பே புற்றுநோய் ஆகும். மனிதர்களுக்கு வரும் நோய் 80-90 சதவீதம் சுற்று சூழலே காரணி ஆகும். புற்றுநோயினை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம். இது தொற்றுநோயோ, பரம்பரை நோயோ அல்ல. மேலும் புற்றுநோய் ஆரம்பநிலையில் வலி இருக்காது.
இன்றைய நவீன மருத்துவத்தின் வளர்ச்சி காரணமாக சராசரி வாழ்நாள் 60 வயதிற்கும் மேலே அதிகரித்துள்ளது. முந்தைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் 30-45 வயதே அதிகம். இன்று 60 வயதினை தாண்டி உயிர்வாழ்பவர்களில் 30 சதவீதம் பேருக்கு புற்றுநோய்கள் உள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கூட ஆண்டு தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்வதாக ஐசிஎம்ஆர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது நாள் ஒன்றிற்கு 3,500 க்கும் மேற்பட்டோர் புகையிலை பாதிப்பால் இறக்கின்றனர். உலக அளவில் பாதிக்கப்பபடும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல் 5 இடத்தினை பிடிக்கும் புற்றுநோய்கள் முறையே மார்பக, கருப்பை வாய்ப்புற்று, நுரையீரல், வயிற்று புற்று நோய் ஆகும். இந்த 5 வகைப் புற்றுநோய்கள் அனைத்து வகை புற்றுநோய்களின் மொத்த சதவிதத்தில் 47.2 இடம்பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 31,7928 ஆண், பெண் புகையிலை பாதிப்பால் இறந்துள்ளனர்.
மற்ற நாடுகளினை விட கருப்பை வாய் புற்று நோய் இந்தியாவில் அதிகம். இதில் நகர்ப்புற பெண்களினை விட கிராமப்புற பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மார்பக புற்றுநோய் பாதிப்பு நகர்ப்புறங்களில் அதிகமாக காணப்படுகின்றது.

 

புற்று நோய்களில் 10 சதவீதம் மட்டுமே மரபுவழி புற்றுநோயாக இருக்கின்றது. கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்படைந்தவர்களினை ஆய்வு செய்ததில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் முக்கிய அறிகுறியாக தெரியவந்துள்ளது. பெண்கள் இது உடல் சூட்டினால் வருகின்றது என சாதாரணமாக எண்ணி விடுகின்றனர். ஆனால் கருப்பைவாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களினை ஆராய்ச்சி செய்துபார்த்ததில் பெரும்பாலோர் வெள்ளைப்படுதல் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர்.

loan point

nammalvar
web designer

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 8 இலட்சத்திற்கு மேற்பட்டோர் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் (ஆண்-பெண்) புற்றுநோயினால் இறக்கின்றனர். பெரும்பாலும் 60-70 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் நோய் முற்றிய நிலையில் காலதாமதமாகவே சிகிச்சைக்கு வருகின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் அடிப்படை கட்டமைப்பு குறைவு மட்டுமே அவர்களின் இறப்பிற்கு காரணம். பெரும்பான்மையான ஆண்களின் இறப்பில் முறையே நுரையீரல், இரைப்பை, வாய்புற்றுநோயாலும் பெண்கள் முறையே கருப்பை வாய்ப்புற்றுநோய், மார்பக புற்றுநோய், இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். மார்பக புற்றுநோய் நகர்புறத்தில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் பெண்கள் தற்போது மேற்கத்திய கலாச்சாரத்தை அதிக அளவில் பின்பற்றுவதாலும் உடல் பருமன், குழந்தைபேறினை தள்ளிப்போடுதல், தாய்ப்பால் கொடுக்காமை, உணவுகலாச்சாரம் ஆகியவையே.

மேலும் புற்றுநோய் ஆரம்பநிலையில் வலி இருக்காது. பெண்களின் மார்பகத்தில் கட்டி இருந்தாலும் வலி இல்லாமல் இருந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மதுபழக்கத்தினை கைவிடுவது, மாதவிடாய் காலத்தில் சுத்தமாக பராமரிப்பது, கட்டுப்பாடான உணவுமுறைகள், காற்று- தண்ணீரை மாசுபடுத்தாமல் இருத்தல், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலையில் கண்டறிதல் மூலம் புற்றுநோயினை கட்டுப்படுத்த இயலும்.

பாப் ஸ்மியர் (PAP SMEAR)மேமோகிராம் மூலம் புற்றுநோயினை ஆரம்பநிலையில் கண்டறிந்து முறையான சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தலாம். குழந்தை திருமணத்தடை சட்டத்தினை மீறி திருமண வயதினை அடையாத இளம் பெண்கள் பூப்பெய்திய உடனே கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் மற்றவர்களைவிட அதிகம் கருப்பை வாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் அதிகளவில் எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவு வகைகள், மேற்கத்திய உணவு முறைகள் மற்றும் சிகப்பு இறைச்சி (RED MEAT) அதிகளவில் உட்கொள்ளுவதால் இரைப்பை புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் மார்பு, கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடுத்ததாக இரைப்பை புற்றுநோய் பாதிப்பினால் தங்களது உயிரினை இழக்கின்றனர்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் அந்தஸ்தில் உயர்ந்த பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் வாதிகள் தங்களது வசதி மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக மட்டுமே வெளிநாடுகளில் சென்று சிகிச்சை எடுத்து கொள்கின்றனர். புற்று நோய்க்கான சிகிச்சை முறையில் இன்று இந்தியா மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளது. ஆனால் பொதுமக்கள் பெரும்பாலோர் இதற்கு மருந்து இல்லை குணப்படுத்த முடியாது என நினைக்கின்றனர். நோயின் தீவிரத்தினை குறைக்கும் அரிய மருந்துகள், அதிநவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், கதிர் வீச்சு முறை சிகிச்சைகள் போன்றவை இன்று மனிதர்களை புற்று நோயில் இருந்து காக்கின்றன. நமது திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனையில் புற்று நோய்க்கான அதிநவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.