யூரோ நாணயங்கள் கொண்ட சிறப்பு அஞ்சல் உறை கண்காட்சி !

0

யூரோ நாணயங்கள் கொண்ட சிறப்பு அஞ்சல் உறை கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் யூரோ நாணயங்கள் கொண்ட சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க சேகரிப்பாளர் முகமது சுபேர் யூரோ நாணயங்கள் கொண்ட சிறப்பு அஞ்சல் உறை தலைப்பில் அஞ்சல் முத்திரையுடனும், பல்வேறு நாட்டின் யூரோ நாணயங்கள் அஞ்சல் உறையினை காட்சிப்படுத்தி பேசுகையில்,

மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம் (Maastricht Treaty) ஐரோப்பிய சமுதாயத்தை ஐரோப்பிய யூனியனாக மாற்றியது. இதனுடைய அடிப்படை இலக்குகளில் ஒன்று, உறுப்பு நாடுகளுக்கு பொதுவான நாணயத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதாக நவம்பர் 1, 1993-⁠ல் தீர்மானிக்கப்பட்டது. * ரோமர்களுடைய காலத்திற்கு பிறகு ஐரோப்பாவில் பொதுவான நாணயம் ஏதும் பயன்படுத்தப் படவில்லை. இப்புதிய நாணயத்திற்கு யூரோ என்று பெயர் சூட்ட தீர்மானிக்கப்பட்டது.

யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும்.

food

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன.

ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும்.

யூரோ நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது

உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள்.

“யூரோ” என்னும் வார்த்தை டிசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது என்றார்.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ரமேஷ் லெட்சுமிநாராயணன், தாமோதரன், சுவாமிநாதன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.