வீட்டுக்கு ஒரு துளசி செடி வளர்ப்போம் !

0
1 full

வீட்டுக்கு ஒரு துளசி செடி வளர்ப்போம் !

 

துளசி (Ocimum tenuiflorum) மூலிகை செடியாகும். ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.

 

இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது.

 

2 full

துழாய், துளவம், மாலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி என வேறு பெயர்களும் உள்ளன.

 

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி , காட்டுத் துளசி என பல வகைகள் உள்ளன.

இந்துசமயத்தில் துளசி வழிபாடு முக்கியமாக கருதப்படுகிறது. துளசிச் செடியின் கிளைகளில் பிரம்மா வசிப்பதாகவும். அனைத்து யாத்திரைத் தலங்களும் அதன் வேர்ப்பகுதியில் காணப்படுவதாகவும், கங்கைநீர் அதன் வேர்ப்பகுதியிலிருந்து வழிந்தோடுவதாகவும், எல்லாத் தெய்வங்களும் அதன் தண்டுப்பகுதியிலும் இலைப்பகுதியிலும் வாசம் செய்வதாகவும், அது மட்டுமல்லாது எல்லா வேதநூல்களும் அங்கே இருப்பதாகவும் காணப்படுகின்றது.

 

எல்லா இந்துக்கள் வீட்டு நடு முற்றத்திலோ, முற்றத்தில் மாடம் அமைத்தோ வணங்கப்படுகின்றது. கூட்டமாக வளர்க்கப்படும் இடங்கள் பிருந்தாவன் என்று அழைக்கப்படுகின்றனர்

 

தினமும் துளசிச் செடிக்கு நீர் ஊற்றி பராமரித்து வந்தால் மோட்சப்பேறு கிடைக்கப் பெறும் என்று நம்பப்படுகின்றது.

 

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அதை வணங்குவது விசேடமாகக் குறிப்பிடப்படுகின்றது. கோலம் இட்டு பூக்கள், பழங்கள், தூபமிட்டு துளசி மாடத்தை வணங்குவார்கள்.

 

துளசியை பூஜிப்பதால் அஷ்ட ஐஸ்வர்யம், புத்திர சம்பத்து, நல்ல கணவன், புகழ், மோட்சம் என அனைத்தும் கிடைக்கும். துளசியைக் கொண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவை அர்ச்சிப்பதால் நான்கு லட்சம் முறை நமஸ்காரம் செய்த பலன் கிடைக்கும்.

துளசிக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஏகாதசி மற்றும் இரவு நேரங்களில் துளசியை பறிக்கக்கூடாது. துளசி செடிக்கு தண்ணீர் அளிப்பது மிகவும் புண்ணியம். இதை ஆண், பெண் என அனைவரும் செய்யலாம்.

 

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

 

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை ஆகும்.

 

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டி போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

 

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.

 

துளசி இலைகளை பச்சையாக மென்று தின்பதால் சளி நீங்கும். பனிக்காலத்தில் பனங்கற்கண்டு இட்ட சூடான துளசி தேநீர் அருந்தினால், உடல் நலம் தரும். தாகம், சுரம், வயிறு உளைச்சல், மாந்தம் இவையெல்லாம் தூய துளசியினால் குறையும்.

 

தினமும் நான்கு துளசி இலை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். வீட்டைச் சுற்றி துளசிச் செடி வளர்த்தால் கொசுக்கள் வராது.

 

துளசி மணி மாலை அணியும் போது அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு பல நோய்களிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. சரும நோய்களுக்கு துளசி சிறந்த நிவாரணி ஆகும்.

 

அனைத்து தாவரங்களுமே பகலில் கார்பன் டை ஆக்ஸைடு எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

 

ஆனால், துளசி மாத்திரம் பகல், இரவு எந்நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் திறன் படைத்தது. இதனால், தூய காற்றை சுவாசித்து நாம் ஆரோக்கியமாக வாழலாம். இத்தனை சிறப்புகளுடைய துளசியை வளர்த்து, வணங்கி உண்டு உயர்வு பெறுவோம் என திருச்சி அமிர்தா யோக மந்திரம் யோகாசிரியர் விஜயகுமார் கூறினார்

3 half

Leave A Reply

Your email address will not be published.