திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

0
1

திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, கேரளா போன்ற உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் நேற்று காலை திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

2

அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தனபால் (வயது 31) என்பவர் தனது உடலில் மறைத்து 1,870 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.48 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்களில் தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ரூ. 1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகம்தான் இதற்கு காரணம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்

3

Leave A Reply

Your email address will not be published.