திருச்சி அருகே நகை திருடும் பெண்கள் சிக்கினர்

0
1

திருச்சிக்கு அருகேயுள்ள முசிறியில் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது2 பெண்கள் சந்தேகப்படும்படி நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தனர். இதனால் போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது போலீசாரின் தனிப்பட்ட விசாரணையில் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் ஆளுக்கொரு பதிலை சொல்ல போலீசுக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் பாவாடைக்குள் இருந்த ஒரு உள்பையில் 15 கொலுசுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

4

இதையடுத்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் இரண்டு பேரும் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் என்பதும், முசிறியில் உள்ள ஒரு நகைக் கடையில் நகை வாங்குவது போல சென்று கடைக்காரர் கவனிக்காத நேரம் பார்த்து இந்த 15 கொலுசுகளையும் திருடியதாக தெரிவித்தனர்.

2

இதையடுத்து சம்பந்தப்பட்ட நகைக்கடைக்காரரை போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது கொலுசுகள் திருட்டு போனது அவருக்கு தெரியவில்லை. போலீஸார் விபரத்தை சொன்னபின்னர்தான் கொலுசுகள் திருடப்பட்டிருப்பதை அறிந்தார். 2 பெண்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஜெ.கே….

3

Leave A Reply

Your email address will not be published.