தண்ணீர் தட்டுப்பாட்டை தொடர்ந்து தலையெடுக்கும் மாசுக்கட்டுப்பாடு

0
1

புனித வளனார் கல்லூரியில் மிகப் பெரிய அளவில் மாசுக் கட்டுப்பாடு விழிப்புணர்வு கருத்தமர்வு
புனித வளனார் கல்லூரி தேசிய கப்பற்படை மூத்த பிரிவு மற்றும் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி கப்பற்படை பிரிவும் மிகப் பெரிய அளவில் மாசுக் கட்டுப்பாடு விழிப்புணர்வு கருத்தமர்வு 5(ம்) எண் தமிழ்நாடு கப்பற்படை பிரிவு சார்பில் இன்று ஜூலை 11 ம் தேதி மதியம் 2.30மணியளவில் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னதாக புனித வளனார் கல்லூரி தேசிய கப்பற்படை மூத்த பிரிவு அதிகாரி சப் லெப்டினன்ட் டாக்டர் வி பாஸ்டின் ஜெரோம் வரவேற்புரை வழங்கினார். இந்த மாசுக் கட்டுப்பாடு விழிப்புணர்வு கருத்தமர்விற்கு சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் அந்தோணி சக்தி, பேராசிரியர் வேதியியல் துறை, புனித வளனார் கல்லூரி அவர்கள் “ மழை நீர் சேகரிப்பும் நிலத்தடி நீர் மேலாண்மையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் வீட்டிலேயே உங்கள் சொந்த மழைநீர் சேகரிப்பு முறையை உருவாக்குவதன் மூலம் அந்த விலைமதிப்பற்ற சொட்டுகளை நீங்கள் சேகரிக்கமுடியும் என்பதையும் இந்த நீரை வடிகட்டி குடிநீராகவும், தோட்டங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும், சேமிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரின் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மேலும் மழை நீர் சேகரிப்பதன் இரண்டு முக்கிய நுட்பங்கள் உள்ளன. அவை எதிர்கால பயன்பாட்டிற்காக மேற்பரப்பில் மழைநீரை சேமித்தல் மற்றும் நிலத்தடி நீருக்கு ரீசார்ஜ் செய்யுங்கள் என்று கப்பற்படை மாணவர்களை கேட்டுக்கொண்டார் இந்த கருத்தை நாம் செல்லும் இடமெல்லாம் கொண்டு போகவேண்டும் என்று தெரிவித்தார்.
அடுத்ததாக இக்கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் டாக்டர் அருள்தாஸ் அவர்கள் “ மாசுகளின் வகைகள் & கையாளுகை மற்றும் தேசிய மாணாக்கர் படையின் விழிப்புணர்வு” பற்றி பேசுகையில் மாசுபாடு ஒரு பெரிய பிரச்சினை என்பதை பெரும்பாலான சான்றுகள் காட்டுகின்றன, எடுத்துக்காட்டாக காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, குப்பைக் கழிவுகள் மற்றும் பலவற்றுக்கு பல வகைகள் உள்ளன.
இன்று நச்சு மாசுபாடு உலகளவில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது என ஆராய்ச்சி அமைப்புகள் தெரிவிக்கின்றன என்று மேற்கோள் காட்டினார்.

2

உலகின் மிக மோசமான மாசுபட்ட இடங்களில் குழந்தைகள் பிறப்பு என்பது குறைபாடுகளுடன் பிறக்கின்றன. புற்றுநோய்கள் மற்றும் பிற நோய்களால் ஆயுட்காலம் 45 ஆண்டுகள் என்பதே கேள்விக்குறியாகவிட்டது என விளக்கினார். மாசுபாடு மிகவும் மோசமானது, ஏனெனில் இது காற்று, நீர், நிலம் சுற்றுசூழல், வாழ்க்கைமுறைகள் மற்றும் தனி மனித உடல்நலம் பாதிக்கிறது. மாசுபாடு ஒரு பெரிய விஷயமல்ல, எங்கள் வாழ்க்கை பாதிக்கப்படாது என்று நீங்கள் நினைக்கலாம். ஏனெனில் மாசுகள் பல பிரச்சினைகளை உருவாக்கி காலநிலையை சேதப்படுத்தும், தாவர வாழ்க்கையை பாதிக்கும் முடிவில் மாசு உங்களை நோய்வாய்ப்படுத்தும், உங்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். இறுதியாக புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி கப்பற்படை பிரிவு முதன்மை அதிகாரி ஜோசப் ராஜராஜன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதில் புனித வளனார் கல்லூரி தேசிய கப்பற்படை கல்லூரி மூத்த பிரிவு மாணாக்கர் 30 பேர் மற்றும் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி கப்பற்படை பிரிவு மாணாக்கர் 100 பேர் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.