கோமங்கலம் கிராமத்தில் சிறு குறு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்

0
Business trichy

 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், கோமங்கலம் கிராமத்தில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தொழில் முனைவோருக்கான தொழில் வாய்ப்பு மற்றும் கடனுதவிகளுக்கான அரசு மானியங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாமானது வரும் 17ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறஉள்ளது.

MDMK

இம்முகாமில், வங்கி உயர் அதிகாரிகள், அரசு திட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க இருக்கினறனர். இதில், சிறிய கைத்தொழில் முதல் பெரிய தொழில் உற்பத்தி வரை துவங்க உள்ளர்கள் கலந்து கொண்டு அரசு வழங்கும் கடனுதவி பற்றிய விபரங்கள் குறித்த ஆலோசனைகளை பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் எடுத்து வந்து பதிவு செய்து கொள்ளவேண்டும்.

Kavi furniture

இம்முகாமானது, மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் உதவி திட்டங்கள், வங்கி விதிமுறைகள் மற்றும் வங்கி கடன் திட்டங்கள், தொழில் துவங்குவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்தல், தொழில் முனைவோருக்கான பண்புகள், சந்தைப்படுத்துதல் குறித்த விளக்கங்கள், மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், வட்டி மானியம் குறித்த விளக்கங்கள், நிதி மேலாண்மை குறித்த விளக்கங்கள், முதலீடு குறித்த ஆலோசனைகள், தகவல் தொடர்பு குறித்த விளக்கங்கள் உள்ளிட்டவை சிறப்பங்களாக கொண்டு நடைபெறஉள்ளது.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.