திருச்சியில் பேன்ஸி நகைகள் செய்ய கற்றுக் கொள்ள வேண்டுமா ?

0
1

“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்” என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. சொந்த தொழிலில் பல பிரச்சினைகள் என்பவர்கள் கூட அதில் இருக்கும் ஆத்ம திருப்தியை உணர்ந்தே அதை தொடர்ந்து நடத்துகின்றனர். நமக்கு எந்த வேலை சரியா வருமோ அதை நேர்த்தியா செய்யும் போது அந்த தொழிலுக்கான மரியாதையும் லாபமும் தன்னால் கிடைக்கிறது. மற்றவர்கள் செய்யும் தொழில்களை நாம் செய்யக் கூடாது என்றில்லை. நேர்மையும் குறைந்த அளவு லாபம் கிடைத்தால் போதும் என்கிற மன நிறைவே நாம் செய்யும் தொழிலை மேம்படுத்தும். இவர்களிடம் சென்றால் சரியான பொருள் கிடைக்கும் என்னும் மக்கள் நம்பிக்கையே ஆதாரமானது.

 

பொதுவாக அழகுபடுத்திக் கொள்ளுதல் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. அதுவும், பெண்கள் அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த முக்கியத்துவத்தின் மீதான ஈர்ப்பை பயன்படுத்தி சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல நம்ம ஊரின் சிறு கடைகளுமே நம்மை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகின்றன. இத்தகைய அழகு சாதன பொருட்களை உருவாக்கும் திறனை மற்றவர்களுக்கும் பயிற்றுவித்து பல பெண்கள் சுய தொழிலில் முன்னேற்ற காரணமாக இருக்கும் அப்துல் ஹமீதை சந்தித்தோம். இவர் திருச்சி சீனிவாசநகரில் ஏ.எம்.பேன்ஸி ஜுவல் மெட்டீரியல் என்னும் கடையின் உரிமையாளர். அவரின் வார்த்தைகள் சில…

 

“கடந்த 20 வருசமா இந்தக் கடையை வெற்றிகரமா நடத்திக்கிட்டு வருகிறேன். ஏதாவது வித்தியாசமான தொழில் செய்யனும்னுதான் இந்தக் கடையை ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில பெண்கள் ஜாக்கெட்டிற்கு ‘ஹேன்ங்கிங்’ பொருட்கள் வித்துட்டு இருந்தோம். காலப்போக்கில அது பேன்ஸி நகைகள் செய்யும் தொழிலுக்கான மெட்டீரியல் ஷாப்பா மாறிடுச்சு. ஆரம்பிச்ச புதுசுல இதப் பத்தி மத்தவங்களுக்கு புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனா இப்ப எங்க கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டவங்க நல்லா சம்பாதிச்சு, நல்ல நிலைமையில் இருப்பதை பார்க்க மனசுக்கு ரொம்ப மன நிறைவா இருக்கு.

 

2

சில பத்திரிக்கைளோடு சேர்ந்து தமிழ்நாட்டில பல மாவட்டங்கள்ல ‘ஜுவல் மெட்டீரியல்’, ‘பெயிண்டிங் ஓர்க் ஷாப்’ நடத்தி இருக்கோம்.இதுல பல பெண்கள் இந்த பேன்ஸி நகை செய்யும் தொழிலை கத்துக்கிட்டாங்க. எனக்கு தொழில் ரீதியாவும் சரி, இந்த தொழிலை மத்தவங்களுக்கு சொல்லிக்கொடுத்ததாலும் எனக்கு நிறைய பலன் கிடைச்சது.என்னதான் ஆன்-லைன்ல பேன்ஸி நகைங்க வந்தாலும் ரொம்ப குறைஞ்ச முதலீட்டில நம்முடைய முயற்சியால செய்யும் நகைகளுக்கு விற்பனை வாய்ப்பு அதிகமாகத்தான் இருக்கு. 10 நிமிஷத்துலயும் இந்த வேலைய செய்யலாம்.

 

ஆனா கொஞ்சம் பொறுமையும் ஆர்வமும் இருந்தா போதும். சில பெண்கள் அவங்களுக்கு தேவையான டிசைன் கேட்பாங்க. அதை அவங்க விருப்பப்படுவதைப் போல அவங்களே செஞ்சு போட்டுக்கலாம். இதை அவங்க போட்டுட்டு வெளியே போகும்போது நல்ல இருக்குது எனக்கும் இதே போல ஒன்னு செஞ்சுகொடுங்கன்னு கேப்பாங்க. அந்த இடத்துல தான் இது பிசினஸாவே மாறுது.

 

பேன்சி நகை செய்யறதுக்கான பயிற்சியும், அதை எப்படி சந்தைப் படுத்துவதுன்னும் நாங்களே சொல்லி கொடுக்கிறோம். அதிலும் களிமண் நகைகளுக்கு வரவேற்பு அதிகமா இருக்கு. அந்த மாதிரி நகைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் ‘சில்க் திரட் ஜுவல்’, ‘ஷாரி பார்டர்’, ‘ஹாங்கிங்ஸ்’, ‘குந்தன் பேஷன்’, ‘மைக்ரோ குவாலிட்டி’, ‘அரக்கு செட்’, ‘பிட்டிங் பிரைடல்’, ‘நூல்கள்’ என எல்லாமே நாங்க வெளி மாநிலங்கள்ல நேரடியா பார்த்து வாங்குறோம், பெண்கள் மட்டும் இல்லாம ஆண்கள் கூட இந்த தொழிலை ஆர்வமா செய்யறாங்க. மூதலீடுகள் குறைவாக போட்டு அதிக லாபம் ஈட்டுற தொழில் இது.” என்றார்.

 

பயிற்சி தொடர்பாக அப்துல் ஹமீதை தொடர்பு கொள்ள 0431-2782567, 0431-4030178 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.