பெல் குழுமத்தின் தலைவர் பொறுப்பேற்பு

0
1

முனைவர் நலின் சிங்கல், பெல் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றார்.

பெல் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் நலின்சிங்கல், இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான பெல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

4

தில்லி ஐஐடியில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், கொல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் மேலாண்மையில் முதுகலை பட்டயப் படிப்பும் முடித்துள்ள முனைவர் சிங்கல், காமன்வெல்த் உதவித்தொகை பெற்றவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் போக்குவரத்துப் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். பெல்லில் சேரும் முன் சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிட் (சிஈஎல்) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்துள்ளார்.

2

இந்திய ரயில்வேயின் போக்குவரத்து சேவைகள் துறையின் செயல்பாடுகள், வணிகம் மற்றும் வர்த்தகத் துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். கன்டெய்னர் கார்பரேஷன் ஆப் இந்தியா லிட், இண்டியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்பரேஷன் (ஐஆர்சிடிசி) மற்றும் சிஈஎல் ஆகிய நிறுவனங்களிலும் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.

முன்னணி தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் போக்குவரத்துப் பொருளாதாரம் மற்றும் வழங்கியல் குறித்த பல்வேறு கட்டுரைகளை படைத்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.