திருச்சி பெல்லில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
Business trichy

உற்பத்தி போனஸ் வழங்க கோரி பெல்லில் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பெல் நிர்வாகம் உற்பத்தி போனஸ் வழங்க வேண்டும் என்றும், அதற்குரிய தேதியை அறிவிக்காததை கண்டித்தும், தொழிற்சங்கங்கள் சார்பில் பெல் மெயின் கேட் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Rashinee album

பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளரும், கூட்டு குழு ஒருங்கிணைப்பாளருமான தீபன் தலைமை வகித்தார். போராட்டத்தில் தொமுச, அம்பேத்கர் யூனியன், அண்ணா தொழிற்சங்கம், பிஎம்எஸ், சிஐடியூ, டிடிஎஸ் மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கங்களை சேர்ந்த நிவாகிகளும், தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.

பின்னர் தீபன் கூறுகையில், பெல் நிறுவனம் உற்பத்தி போனஸ் வழங்க வேண்டும். அதற்குரிய தேதியை அறிவிக்கும் வரை பெல் பங்கு பெறும் தொழிற்சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.