அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பு

0

திருச்சிராப்பள்ளி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தற்பொழுது நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு (முழு நேரம்) பட்டய சேர்க்கையின் போது ஏற்பட்டுள்ள துறை வாரியான காலியிடங்களை மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. என திருச்சிராப்பள்ளி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வம் தெரிவித்துள்ளார்.

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சி-22-ல் தற்பொழுது நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு (முழு நேரம்) பட்டய சேர்க்கையின் போது ஏற்பட்டுள்ள துறை வாரியான காலியிடங்களை மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பிக் கொள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்குநரால் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து டிப்ளமோவிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- SC/ST பிரிவினர் சான்றொப்பமிட்ட சாதிசான்றிதழை கொடுத்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பு – துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வழங்குவது, பெறுவது மற்றும் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான கடைசி நாள்.12.07.2019.

முதலாமாண்டு பட்டயப்படிப்பு – துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வழங்குவது, பெறுவது மற்றும் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான கடைசி நாள். 19.07.2019.

இக்கல்லூரியில் முதலாமாண்டில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், சர்க்கரை தொழில் நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கும், நேரடி இரண்டாமாண்டில் சர்க்கரை தொழில் நுட்ப துறையில் காலியாக உள்ள இடங்களுக்கும் மாணவர்களின் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முழுநேர டிப்ளமோ படிப்பி;ற்கு ஆண்டு ஒன்றிற்கு கட்டணம் சுமார் ரூ.2.200/- மட்டுமே. மேலும் இக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவஃமாணவியர்கள் தமிழக அரசின் இலவச மடிக்கணிணி, இலவச பஸ் பாஸ், கல்வி உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை ஆகியவற்றை பெற்று பயன்பெறலாம்.

இக்கல்லூரி சிறந்த கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், தரமான கல்வி மற்றும் ஆய்வக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல வசதிகள் கொண்டது. இக்கல்லூரியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதி வசதிகள் உள்ளது. திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் BHEL அருகில் இக்கல்லூரி அமைந்துள்ளது.

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளிடையே வாரியத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி விகிதமும், இறுதி ஆண்டில் படிக்கும் போதே கேம்பஸ் இண்டர்வியூ மூலம் அதிகபட்சமாக மாதம் ரூ.30,000/- வரை சம்பளம் பெறும் பணிநியமன ஆணையினை பெற்றுத்தரும் இக்கல்லூரியில் சேர்ந்து படித்து பயன்பெறுமாறு 10 ஆம் வகுப்பு மற்றும் +2, ITI  தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்களை இக்கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடி மலை, திருச்சி-22 தொலைபேசி எண். 0431-2552226 மின்னஞ்சல், gptc_trichy@yahoo.co.in தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு திருச்சிராப்பள்ளி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.