திருச்சியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

0
Business trichy

மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள பாழையாறு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜன், விவசாயி. இவரது மனைவி ஜமுனாராணி(22). இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

web designer

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜமுனாராணி கைக்குழந்தையுடன் திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. கணவர் கிருஷ்ணராஜன் மாமனார் வீட்டுக்கு வந்து பார்த்தபோதும் ஜமுனாராணி இல்லை. எனவே கைக்குழந்தையுடன் அவர் மாயமாகி இருப்பதாக தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிந்து மாயமான ஜமுனாராணியை தேடி வருகின்றார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.