திருச்சியில் உயிரை பறிக்க ஊசலாடும் எமன்- கைகோர்க்கும் மாநகராட்சி.

0
Business trichy

கடந்த 2016 வருடம் கோயம்புத்தூரில் தன்னார்வ தொண்டு நிறுவங்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் பொதுமக்களின் உயிரைப்பறிக்க இருக்கும் தொங்கும் விளம்பர பலகைகளை அகற்றவேண்டும் என்று வழக்கை தொடரப்பட்டது.

அதனடிப்படையில் விசாரணையின் மூலம் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கும் நிமித்தம் உயர்நீதிமன்ற வழக்கு எண் 41289/2016 மூலம் தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களிலும், சிக்கனல்களிலும் அமையப்பட்டுள்ள விளம்பரப்பலகைகளை உடனே அகற்றகோரி தேசிய நெடுஞ்சாலை முதன்மை பொறியாளருக்கு உத்தரவை பிறப்பித்தது. மேலும் 15 நாட்களில் கோவை மாநகரில் அமையப்பெற்றிருக்கும் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் கோவை மாநகரில் இதுவரையிலும் எந்தவித தனிப்பட்ட நிறுவனங்களின் விளம்பர பலகைகளை வைப்பதற்கு அனுமதி கொடுப்பதில்லை.

Kavi furniture

    

 

MDMK

மேலும் அதனைத்தொடர்ந்து திருச்சில் சமூக ஆர்வலர் அய்யாரப்பன் 30-10-2017 அன்றைய உயர்நீதிமன்ற வழக்கு எண் 41289/2016 மூலம் தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களிலும், சிக்கனல்களிலும் அமையப்பட்டுள்ள விளம்பரப்பலகைகளை உடனே அகற்றகோரி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருச்சியில் மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் சாலை ஓரங்களிலும், சிக்கனல்களிலும் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும் என்றும், அந்தரத்தில் தொங்கும் விளம்பரப்பலகைகளால் எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு இருப்பதால் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரையிலும் அப்புகாருக்கான எந்தவித பதில்களும் இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் அய்யாரப்பன்.

 

திருச்சியில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இதுப்போன்ற விளம்பரபலகைகள் அமைந்துள்ளன. ஆனால் மாவட்ட ஆட்சியரோ/ மாநகராட்சியோ எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். காரணம் அதிலிருந்து வரும் வருமானம் எங்கு நின்றுவிடுமோ என்ற அச்சம் தான் இருக்கின்றதொலிய, பொதுமக்களின் உயிருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை… என்ற அலட்சியப்போக்குதான் என்கின்றார்கள் பொதுமக்கள்…

ஜெ.கே…..

Pranav city

Leave A Reply

Your email address will not be published.