சுப்பிரமணிய சித்தர் தொடர்ச்சி…. (பதினெண் சித்தர்கள் – 3)

0
Full Page

சுப்பிரமணிய சித்தர் – பிற்சேர்க்கை

(அகத்தியர் பற்றிய உண்மை)

சுப்பிரமணிய சித்தர் நூல்கள் எல்லாம் அகத்தியரை விளித்துக் கூறியவைகளாகவே உள்ளன. அவர் அகத்தியருக்கு நீண்டகாலம் தமிழ் இலக்கணம், வாழ்க்கைக் கல்வி, பிரம்ம ஞானம் முதலாக எல்லா கலைகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த உபதேச காலம் முழுவதும் நந்தீசரும் அவர்களுடன் இருந்திருக்கிறார்.

இவர்கள் யாவருமே பிரம்ம ஞானிகள், மரணமிலாதவர்கள், எல்லா யுகங்களிலும் வாழ்ந்து வரும் நிறைமொழிமாந்தர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் கடல் கோள் ஏற்பட்டதில் இறையனார் அகப்பொருள் அகத்தியர் இயற்றிய தமிழ் இலக்கணம் போன்ற எண்ணற்ற நூல்கள் கடலால் கொள்ளப்பட்டு விட்டன. கரைஓரம் ஒதுங்கியதில் கிடைத்த நூல்களில் தொல்காப்பியத்தின் பகுதிகள் தான் குறிப்பிடத்தக்கவை. அந்த இலக்கண நூலில் எங்கும் ‘சித்தர்’ என்ற சொல் இடம்பெறவே இல்லை. தொல்காப்பியர் அகத்தியர் முதலாக அக்காலத்தில் வாழ்ந்த பிரம்ம ஞானிகள் யாவரும் “நிறைமொழி மாந்தர்” என்றே குறிப்பிடப்படுகின்றனர். கி.பி.5ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பிரம்மஞானிகளே ‘சித்தர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இக்கால கட்டத்தில் சுமார் 37 அகத்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ‘அகத்தியர் வரலாறு’ என்ற நூல் கூறுகிறது. இக்காலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட அகத்தியர்கள் இருந்திருக்கக்  கூடும் என்று தமிழ்நாட்டு சித்தர்களைப் பற்றிய ஆய்வுகள் கூறுகின்றன.

அகத்தியர் பிரமன் செய்த கும்பத்தில் தோன்றியவர் மித்திரன் ஊர்வசிமேல் மோகம் கொண்டு வீரியத்தைக் கும்பத்தில் இட அதில் இருந்து தோன்றியவர், புலத்திய முனிவரின் சகோதரியான லோபமுத்திரையை மணந்தவர்.

Half page

கயிலையில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது தென்திசைக்கு அனுப்பப்பட்டவர், விந்தியனை(விந்தியமலையை) வென்றவர், வாதாபியை விழுங்கிய வில்வவனை அடக்கியவர் போன்ற கதைகள் (Legends)  பிற்காலத்தில் எழுந்த புராணக்கதைகள்.

இவையல்லாது ஆயுர்வேதபாஷ்யம், சிவஜாலம், சக்தி ஜாலம், சண்முக ஜாலம், அகத்தியர் கர்மகாண்டம் போன்ற பிற்காலத்தில் எழுந்த 96 நூல்கள் அகத்தியர் நூல்களாகவே கருதப்படுகின்றன. அவைகளின் சில ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவைகளாகவும் உள்ளன. இவர்கள் காலத்தில்தான் ‘சித்தர்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது சித்தர்கள் பற்றிய வெவ்வேறு ஆய்வாளர்கள் பதினெண் சித்தர்கள் என்று கிட்டத்தட்ட பத்து தொகுப்புகள் கொடுத்துள்ளனர். அவைகள் அனைத்திலும் அகத்தியர் என்ற பெயரிலோ அல்லது கும்பமுனி என்ற பெயரிலோ ஒரு அகத்தியர் இடம்பெறுகிறார். அவைகளில் சித்த மருத்துவ ஆராய்ச்சிகழகம் நடத்திய மருத்துவ மாநாடு ஒன்றில் வெளியிடப்பட்ட ஆய்வு நூலில் மட்டும் 18 சித்தர்களின் பெயர்களும் அவர்களின் சமாதிகள் உள்ள கோவில்களும் கூறப்படுகின்றன.

அவைகளாவன:

1.வன்மீகர்(எட்டுக்குடி), 2. கோரக்கர்(பொய்கைநல்லூர்), 3.கமல முனி(திருவாரூர்), 4.குதம்பைச் சித்தர்(மயிலாடுதுறை), 5.தன்வந்திரி(வைத்தீஸ்வரன் கோயில்), 6.சட்டைமுனி(ஶ்ரீரங்கம்), 7.காங்கேயர்(கரூர்), 8.திருமூலர்(சிதம்பரம்), 9.பாம்பாட்டிச்சித்தர்(விருத்தாச்சலம்),10.இடைக்காடர்(திருவண்ணாமலை), 11.பதஞ்சலி(இராமேஸ்வரம்), 12.சுத்தரானந்தர்(மதுரை), 13.மச்சமுனி(திருப்பரங்குன்றம்), 14.இராமதேவர்(அழகர்மலை-பழமுதிர்ச்சோலை), 15.போகர்(பழநி), 16. கும்பமுனி:அகத்தியர்(திருவனந்தபுரம்), 17. கொங்கணவர் திருப்பதி(திருமலை), 18. நந்திதேவர்(வாரணாசி(காசி)

வேறு சித்தர் சமாதிக் கோவில் தொகுப்புகளில் ஒன்று கும்பமுனி கும்பகோணத்தில் சமாதி கொண்டுள்ளார் என்றும், சட்டைமுனி சீர்காழியிலும், பாம்பாட்டிச்சித்தர் திருஞாலம் என்ற தலத்திலும் சமாதி கொண்டுள்ளனர் என்றும் கூறுகிறது. வேறு சில பதினெண் சித்தர் தொகுப்புகள் கரூரில் கருவூராரும், திருக்கடவூரில் காலங்கிநாதரும், திருவாவடுதுறையில் வெகுளிநாதரும் சமாதி கொண்டுள்ளனர் என்றும் கூறுகின்றன. இவர்களோடு சத்தியநாதர் சகோதநாதர் முதலான நவநாத சித்தர்களும் கூட சித்தர்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இந்த பதினெண் சித்தர்கள் தொகுப்பில் வரும் எந்த அகத்தியரும், சுப்பிரமணிய சித்தரின் உடனிருந்து குரு-சீடன் முறையில் ஞானம் பெற்ற அகத்தியர் அல்ல என்பதுதான் உண்மை. காரணம் சுப்பிரமணிய சித்தரும்,  அந்த அகத்தியரும் வாழ்ந்த காலம் இரண்டாம் கடல்கோளுக்கு முற்பட்ட காலம். தெற்கே குமரிமலையும், பஃருளியாரும் இருந்த காலம். இப்போது இமயம் உள்ள பகுதி தெதியன் கடல் என்ற பெருங்கடல் பகுதியாக இருந்தகாலம். அந்த அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற நூலும் கடலால் கொள்ளப்பட்டுவிட்டது. இப்போதும் இவர் பொதிகை மலைப்பகுதியிலிருந்து அருளாட்சி செய்து வருகிறார் என்ற உண்மைதான் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.