2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

0
Business trichy

 

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள  இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்களாக (Social Worker) நியமிக்கப்படுவதற்காக, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

loan point
web designer

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சமூகவியல்   அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும் . ஒரு குழுவில் அதிகபட்சமாக  ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

nammalvar

தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள்¬ 22.07.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதூப்பு அலகு, எண்.5, முதல் தளம், கலையரங்க வளாகம் (பின்புறம்), மெக்டொனால்டு ரோடு, திருச்சிராப்பள்ளி – 01. தொலைபேசி எண் 0431-2413055 என்ற முகவரியில் கிடைக்கபெறுமாறு  விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மேற் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு  தெரிவித்துள்ளார்.

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.