திருச்சி வெள்ளிவிழா பூங்காவில் இலவச மருத்துவ பரிசோதனை

0

திருச்சி மாநகராட்சி சார்பில் வெள்ளிவிழா பூங்காவில் நடைபயிற்சி செய்யும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையை ஆணையர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.திருச்சி மாநகராட்சி சார்பில் பூங்காக்கள் மற்றும் நடைபயிற்சி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினந்தோறும் காலை மற்றும் மாலையில் நூற்றுக்கணக்கான நபர்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து நடைபயிற்சி செய்யும் பொதுமக்களுக்கு இலவச சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் ஒவ்வொரு  ஞாயிறன்று காலை நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சந்தா 2

அதன்படி நேற்றுமுன்தினம் 46வது வார்டு நியூராஜா காலனியில் அமைந்துள்ள வெள்ளிவிழா பூங்காவில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபயிற்சி செய்யும் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் போன்ற பரிசோதனைகள் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. டாக்டர்.குணசேகரன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் அப்பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்துகொண்டனர். மேலும், சில பூங்காக்களில் இத்திட்டம் தனியார் மருத்துவமனைகள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.