உயிர் வளர்ப்போம்-27

கதை வழி மருத்துவம் (அருளமுதம் எனும் அருமருந்து)

0
1

உடல் மற்றும் மனதின் உள்நிலை உயர் ஆற்றலே ஆங்காரம்

தொடர்ந்து பேசிய யோகியார் அன்பானவர்களே நம்முள் நான்காவது அந்தக்கரணமாக விளங்குவது ஆங்காரம் ஆகும்.

ஆங்காரம்: இந்த ஆங்காரம் என்பது நமக்குள் விளங்கக்கூடிய அடிப்படை உந்து சக்தியாகும். உடல் மற்றும் மனதின் உள்நிலை உயர் ஆற்றலே ஆங்காரம் ஆகும். பலரும் ஆங்காரத்தை அகங்காரம் என்று தவறாக புரிந்து கொள்வது உண்டு. அகங்காரம் என்பது உடலின் 8 இராகங்களில் ஒன்றாகும். ஆனால் ஆங்காரம் என்பது உடல் மற்றும் மனதின் அடிப்படை உந்து சக்தி ஆகும். ஒருவருடைய திறனும் செயல்வேகமும் இந்த ஆங்காரத்தை பொறுத்தே அமையும். இந்த ஆற்றல் இல்லாத சிலர் செயல்திறன் அற்றவர்களாகவும் செயல்வேகம் அற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும் விளங்குகிறார்கள். உடலில் உள்ள ஆங்காரத்தினை பெருக்குவதற்கு அஸ்வினி முத்திரை பயின்று வருதல் வேண்டும்.

4

அஸ்வினி முத்திரை என்பது நமது ஆசனவாயை அடிக்கடி சுருக்கி விரித்து செய்து வரும் பயிற்சி ஆகும். ஆசனவாயை சுருக்கும் பொழுது மூச்சை உள் இழுக்கவும், ஆசனவாயை தளர்த்தும் பொழுது மூச்சை வெளி விடவும் வேண்டும், இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்துவர நம் உடலில் ஆங்காரம் அதிகரிக்கும்.

2

மும்மண்டலங்கள்

உடலின் 96 தத்துவங்கள் தத்துவங்களில் அடுத்ததாக வருவது மும்மண்டலங்களாகும். சூரிய மண்டலம், சந்திர மண்டலம் மற்றும் அக்கினி மண்டலம் ஆகிய இந்த மூன்று மண்டலங்களும் ஒன்றிணைந்தே மும்மண்டலங்கள் என அழைக்கப்படுகின்றன.  இந்த மூன்று மண்டலங்களும் நம் உடலில் தீயாக இருந்து வருகின்றன. இந்த மூன்று தீயையும் இறைவனிடம் சேர்த்து இறவா நிலையை அடைவதே முத்தி ஆகும். நமது உடலில் உயிரானது தீயாகவே விளங்குகின்றது, நம் உடலிலிருந்து இந்தத் தீ நீங்கும்பொழுது நம் உடல் உயிரற்று மண்ணில் சாய்கிறது. இந்த மும் மண்டலங்களின் சமநிலையின்மையே நமது உடலில் பக்கவாதமாகவும் நடுக்குவாதமாகவும் வெளிப்படுகின்றது.

சந்திர மண்டலம்: நமது உடலில் இடது புறம் முழுவதும் பரவி நிற்கக்கூடிய தீயே சந்திர மண்டலம் ஆகும். இதனை இது நம்மிடம் காமமாக வெளிப்படுகின்றது. உடலில் சந்திர மண்டலம் மிகுந்து விட்டால் அதீத காம வேட்கையும், குறைந்துவிட்டால் சிற்றின்பத்தில் ஈடுபாடு இன்மையும் தோன்றும்.  சந்திர மண்டலத்தை ஒரு உடலில் அதிகரிக்க இடது நாசியில் 16 மாத்திரைகள் கால அளவு காற்றை சீராக உள்ளிழுத்து 64 மாத்திரைகள்  காற்றை வெளிவிடாது சுவாசத்தை உள்ளே நிறுத்தி 32 மாத்திரைகள்  காற்றை வலது நாசி வழியாக சீராக வெளியேற்றி அதன் பின்னர் காற்றை உள்ளிழுக்காமல் 8 மாத்திரைகள் வெளியே நிறுத்தி  சுவாச பயிற்சி செய்து வர வேண்டும். சந்திர மண்டலத்தை நம் உடலில் கட்டுப்படுத்த இதே பயிற்சியை நாசி மாற்றி செய்து வர வேண்டும்.

சூரிய மண்டலம்: நமது உடலில் வலதுபுறம் முழுவதும் பரவி இருக்கக் கூடிய தீயே சூரிய மண்டலம் ஆகும். இது நம் உடலில் கோபமாக வெளிப்படுகின்றது. உடலில் சூரிய மண்டலம் அதிகரித்துவிட்டால் அதிகமான கோபமும் குறைந்துவிட்டால் அதிகப்படியான விரக்தி மனோபாவமும் தோன்றும். சந்திர மண்டலமும் சூரிய மண்டலமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. அதேசமயம் ஒன்று அதிகரித்தால் மற்றது தானாக குறைந்துவிடும் இந்த உத்தியைக் கொண்டு சூரிய மண்டலத்தையும் சந்திர மண்டலத்தையும் நாம் சமநிலைப்படுத்திக் கொள்ளலாம்.

அக்கினி மண்டலம்: நமது உடலில் நடுநிலையாக நின்று உடல் முழுவதும் பரவி நிற்கக்கூடிய தீயே அக்கினி மண்டலம் ஆகும். இதுவே உச்சி முதல் குதம் வரை நேராக ஓடும் சுழிமுனை ஆகும். இது நமது உடலில் வெப்பநிலையாக வெளிப்படுகின்றது. உடலில் அக்னி மண்டலம் அதிகரித்துவிட்டால் காய்ச்சலும் குறைந்துவிட்டால் உடலில் குளிர்ச்சியும் தோன்றும். நடுவனைய இருக்கக்கூடிய அக்னி மண்டலம் இயல்பாகவே தன்னைத் தானே சமநிலைப்படுத்திக் கொள்ள கூடியது, இருப்பினும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் இரு நாசிகள் வழியாகவும் சுவாச பயிற்சியை மேற்கொள்ள வெண்டும்.

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்