தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி அவசியம்

மனிதன் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.எத்தகைய நோய்களையும் குணப்படுத்தக்கூடிய வல்லமை படைத்தது நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி. தற்போதைய உலகில் நாம் எந்திர மயமாக இயங்கிக்கொண்டிருக்கிறோம். இதற்கு சற்று நேரமாவது நமது உடலுக்கு பயிற்சியை கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவது குறித்து திருச்சி நியூரோ பவுண்டேசன் நிறுவனர் மருத்துவர் அருண்ராஜ் மேலும் கூறுகையில், மாதத்தில் முதல் ஞாயிற்றுகிழமை இந்த நியுரோ பவுண்டேசன் மருத்துவமனையில் மக்களுக்கு இலவசமாக வைத்தியம் செய்யப்படுகிறது. பக்கவாதம், வலிப்பு நோய், தலைசுற்றல், ஒற்றை தலைவலி போன்ற நோய்கள் குணப்படுத்தபடுகிறது. இங்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் வலி மற்றும் பக்கவாதத்தின் தன்மையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் வருவதற்கான காரணங்களை பற்றியுமான விழிப்புணர்வு நோயாளிகளுக்கு தரப்பட்டு பின்னர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகை பிடிப்பதனாலும் இதர கெட்ட பழக்கங்களினாலும் மட்டுமின்றி உடல் பருமன், சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்றவையே 50 வயதிற்கு மேல் பக்கவாதம் வருவதற்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. பரம்பரை நோய் அல்லது இரத்த நாளங்களில் கொழுப்பு அதிக அளவில் சேரும் போதோ சிறிய வயதில் பக்கவாதம் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்ட நான்கரை மணி நேரத்திற்குள் நரம்பியல் மருத்துவர்களை அணுகினால் ஒரு விலை உயர்ந்த ஊசியை அவர்களின் உடலில் செலுத்துவதன் முலம் மூளையில் உள்ள அடைப்பை சரி செய்தவதோடு மட்டுமின்றி முறையான பிசியோதெரப்பி பயிற்சிகளினாலும் பக்கவாத பாதிப்புகளிலிருந்து அவர்களை விரைவாக குணப்படுத்திட வாய்ப்புகள் அதிகரிக்கும். நான்கரை மணிக்கு மேல் வந்தார்களே ஆனால் கொஞ்சம் காலதாமதமாக குணமாக வேண்டியிருக்கும்.
வாய் கோணல், கைகள் அதிக நேரம் தூக்க இயலாமை, பேச்சு குளறும் போதோ உடனடியாக மருத்துவரை தாமதில்லாமல் அணுக வேண்டும், தாமாதித்தாலோ நமது மூளையில் உள்ள நியூரான்கள் இறந்து கொண்டே இருக்கும் இதை மருத்துவ துறையில் FAST என்கின்றனர் மருத்துவர்கள்.

மூளையில் இரத்த அடைப்பு ஏற்படும் போது அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது இது உயிருக்கே கூட சில சமயம் ஆபத்தாக முடிய கூடும் ஏனெனில் மூளை ஒரு மூடி வைத்த பெட்டி மாதிரி அதனால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அழுத்ததை தாங்க இயலாது. அந்த நேரத்தில் மருத்துவராகிய நாங்கள் மூளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட எலும்பை எடுத்து அந்த அழுத்ததை குறைக்கின்றோம் இதனால் உயிர் காப்பாற்றபடுவதோடு மட்டுமின்றி விரைவில் எழுந்து நடக்கும் அளவிற்கு வழிவகை செய்கிறோம்.
இது போல் பல பேரை எங்களின் மருத்துவமனையில் காப்பாற்றி உள்ளோம். இடது கை வலி என்பது இருதய வலிக்கான ஒர் அறிகுறியாகவே மக்களிடையே காணப்படுகிறது. பக்கவாதம் இடது அல்லது வலது பக்கமும் வரலாம். பொதுவாகவே நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கை பழக்கமுடையவர்கள் அதனால் இடது மூளையில் டாமினேன்ட் லோப் அதாவது மற்ற பகுதிகளுக்கு கட்டளையிடும் திறன் உள்ளது. இடது மூளையில் டாமினேன்ட் லோப் பகுதியில் அடைப்பு ஏற்படும் போது வலது கை கால் பக்கவாதம் ஏற்படுகின்றது இது பேச்சு திறனையும் பாதிக்கிறது.
இதனை சரி செய்வது மிகவும் சவால் நிறைந்த ஓரு விஷயமாக கருதப்படுகிறது.
பக்கவாதத்ற்கு அடுத்ததாக ஒற்றை தலைவலி எனப்படும் கொடிய தலைவலி பெரும்பாலான மக்களிடையே காணப்படுகிறது. மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் விரிவடைவதினால் ஏற்படும் வலியே ஒற்றை தலைவலியாகும். இந்த வலி ஏற்படும் போது மிகவும் துடித்து போவார்கள் இருட்டை தேடி செல்வார்கள். அப்படிபட்டவர்களுக்கு முதலில் தலையில் ஸ்கேன் செய்து தலையில் ஏதேனும் கட்டி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அவ்வாறு கட்டி எதுவும் இல்லாத பட்சத்தில் 6 மாதத்திற்கு விடாமல் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்து கொண்டாலே போதுமானது. ஒற்றை தலைவலியிருந்து முழுமையான விடுதலை பெற முடியும்.அலர்ஜியினால் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கால் நடக்க முடியாமல் எங்கள் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் வந்தார். அவருக்கு தகுந்த சிக்கிச்சைகள் அளித்து அல்லும் பகலுமாக சிறப்பான முறையில் கவனித்து பத்தே நாட்களில் அவரை எழுந்து நடக்கும்படி செய்ததே என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக இருக்கிறது என்றார்.
வியாதிகள் முற்றிலும் வராமல் இருக்க மிக முக்கியமாக செய்ய வேண்டியது இரு விஷயங்கள்:
ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நடைபயிற்சி இவ்இரண்டையும் சரியாக செய்து எந்த விதமான கெட்ட பழக்கம் இன்றி வாழும் வாழ்க்கை முறையே நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழும் வாழ்க்கையாகும். திருச்சி மக்கள் அனைவரும் இதனை கடைபிடித்து நோயற்று வாழ இறைவனை வேண்டுகின்றேன்.மருத்துவ துறையில் சிறந்த சேவையாற்றி வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
