திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு- குழந்தைகள் நல மருத்துவ முகாம்

0
Business trichy

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் உள்ள  பிரண்ட்லைன் மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவ முகாம் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இம் முகாமில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

Rashinee album

இம் முகாமில் மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் என். சுஜரிதா கலந்து கொண்டு குழந்தையின்மை, மாதவிடாய், நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை சம்பந்தமான தொந்தரவு மற்றும் புற்றுநோய் கண்டறிதல், கர்ப்பத்தடை சிகிச்சை மற்றும் அதற்கான ஆலோசனைகளையும், சர்க்கரை நோய், தைராய்டு, அதிக உதிரப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் முதலிய பெண்களுக்கான பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Image

மேலும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர். கானவி கலந்து கொண்டு குழந்தைகளுக்கான அலர்ஜி மற்றும் ஆஸ்துமா சிகிச்சை, குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை பற்றிய ஆலோசனைகளும், ரத்தக் குறைவு, எடை குறைவான குழந்தைகளை பராமரிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் கண்டறிந்தும், தடுப்பூசி போட தவறிய குழந்தைகளுக்கான ஆலோசனை மற்றும் அதற்கான  சிகிச்சைக முறைகள்,  குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனைகளும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கமளித்தார்.  இம் முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம் முகாமில் அறுவை சிகிச்சைக்காக 10 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதயபாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.