திருச்சியில் போலீசுக்கு சரமாரியாக வெட்டு

0
D1
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு உரிமை உள்ளது. அவ்விதத்தில் குற்றவாளிகள் ஒருமுறை, மறுமுறை என மீண்டும், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அவர்களின் மீது சரியான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் தப்புகளை தட்டி கேட்கும் காவல்துறையினரையே தாக்கும் அளவுக்கு வளர்ந்து விடுகின்றனர்.
D2
இதுப்போன்ற சம்பவங்கள் தமிழக போலீசாருக்கு பலமுறை நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
N2

மேலும் அதனைத்தொடர்ந்து திருச்சியில் மார்க்கெட், அரியமங்கலம் போன்ற காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கிய இஸ்மாயில் (30) எனும் ரவுடி குடித்துவிட்டு உக்கடம் பகுதியில் கடைகளில் சத்தமிட்டுக்கொண்டிருந்தார், அவ்வழியே வந்த
அரியமங்கலம் காவல் நிலைய ஏட் போலீசார் ஹரிஹரன் இஸ்மாயிலை கண்டீத்துள்ளார். பின் அவர் அவருடைய வாகனத்தில் ஏறியபோது பின்னே தொடர்ந்து வந்து பயங்கர ஆயுதத்துடன் இஸ்மாயில் போலீஸ் ஹரிஹரனை சரமாரிய கழுத்து, தலைகளில் வெட்டியுள்ளார். மேலும் வெட்டுப்பட்ட போலீஸ் ஹரிஹரன் சத்தமிட்டதில் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளனர். இதனையறிந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மேலும் படுகாயமடைந்த போலீஸ் ஹரிஹரனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அதன் பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போலீசார் இஸ்மாயிலை வளைத்துப்பிடித்தனர்.
மேலும் திருச்சியில் பட்டப்பகலில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் திருச்சி மாநகர வட்டாரத்திலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஜெ.கே

N3

Leave A Reply

Your email address will not be published.