காதல் கதைகளை இயக்க ஆசை பிரகாஷ் பாஸ்கர் நேர்காணல்…….

0
gif 1

‘தமிழ் சினிமாவில்’ உதவி இயக்குனர்களின் பணி என்பது மிக முக்கியமான ஒன்று. அதில், திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்று உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ள பிரகாஷ் பாஸ்கர் ‘நம்ம திருச்சி’ இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்…

 

உங்களைப் பற்றி…
பிறந்தது, வளர்ந்தது, எல்லாமே திருச்சியில் தான். டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு பி.இ. படிச்சேன். இதுவரை 7 குறும்படங்கள் இயக்கியுள்ளேன். அதில், ‘கண்ணே கலைமானே’, ‘எதிர்த்து நில்’ போன்றவை நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், பிலிம் பெஸ்டிவல் விருதும் பெற்றுத்தந்தது. காதல் பற்றி கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளேன்.
இரண்டு படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். இந்த அனுபவங்களை வைத்து தற்போது திரைப்படம் இயக்கவுள்ளேன்.

 

எந்த ஜெர்னலில் படம் இயக்க ஆசை?
காதல் கதைகளை இயக்க ஆசை. ‘நிகோலஸ் ஸ்பார்ச்சஸ்’ எழுதிய ‘த நோட்புக்’ போன்ற கதைகளை தமிழ்ல படம் பண்ண ஆசை. 100 ல 99 பேர் காதலை கடந்து வந்திருப்பாங்க. எனவே, என்னோட சாய்ஸ் காதல் தான்.

gif 3

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எப்படி?
நான் இயக்குனராகப் போறேன் என்று வீட்டில் சொன்னதும் முதலில் சிரித்தார்கள். நான் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் நான் எடுக்கும் முயற்சிகளையும், குறும்படங்களையும், பார்த்துட்டு என்னைவிட எங்க வீட்டுல எனக்கு சினிமா தான் தொழில்னு சீரியஸா எடுத்துக்கிட்டு அம்மாவும், அப்பாவும் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.

 

gif 4

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களின் நிலை மாறியிருக்கிறதா?
அந்தக் காலத்துல ஒரு உதவி இயக்குனர் இயக்குனரிடம் பல வருடம் பணியாற்றியிருக்க வேண்டும். பின்னர் தான் ஒரு படம் இயக்கும் முடியும்.
ஆனால், இப்போது, ஒரு படம் உதவி இயக்குனராக வேலை பார்த்தாலே போதும் இயக்குனர் ஆகிவிடலாம்.

 

வருமானம் கிடைக்கின்றனவா?
உதவி இயக்குனர்களுக்கு வருமானம் என்பது எந்த படம், எந்த தயாரிப்பாளர், என்பதனை பொறுத்துள்ளது. பொதுவா எல்லா உதவி இயக்குனர்களுக்கும் வருமானம் இல்லைன்னு சொல்லிவிட முடியாது.

 

பிடித்த இயக்குனர்கள் யார்?
கே.பாலச்சந்தர், பாலு மகேந்திரா இவங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் காதலை சொன்ன விதம், அபயர், லஸ்ட், லவ், இதன் எமோஷனை இரண்டு இயக்குனர்களும் கச்சிதமா காண்பித்திருப் பார்கள். இவங்க ரெண்டு பேரும் எனக்கு இன்ஸ்பிரேஷன். அதுக்கு அப்புறமா பாலிவுட்ல கரண்ஜோஹர் ‘மை ஆல் டைம் பேவரைட்’.


உங்களின் அடுத்த இலக்கு என்ன?
நிறைய காதல் படம் பண்ணனும். ஸ்கிரிப்ட் போயிட்டு இருக்கு கூடிய சீக்கிரம் நல்ல படத்தோட வருவேன்னு நம்பிக்கை இருக்கு.

சந்திப்பு: ஜோல்னா ரெங்கா

gif 2

Leave A Reply

Your email address will not be published.