திருச்சி மக்களின் கோரிக்கைகளை ஏற்பாரா மாவட்ட ஆட்சியர்

0
gif 1

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் திருச்சியிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அமைந்திருக்கும் பேருந்துநிலையமாகும். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளுக்கு பகல் நேரமோ / இரவு நேரமோ எந்தவிதத்திலும் பாதுகாப்பு இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

gif 3

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி மிக அருகில் ஆங்காங்கே ஒயின்சாப் இயங்கி வருகிறது. சுமார் மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி மட்டும் 6 ஒயின்சாப்கள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. இங்கு மது அருந்திவிட்டு வரும் நபர்கள் பஸ் ஸ்டாப்களிலும் , ரோட்டிலும் ஆடைகள் இல்லாமல் அரை குறையுமாக விழுந்து கிடக்கின்றனர், அதுமட்டுமல்லாது பகல் நேரத்தில் மது அருந்திவிட்டு பஸ் ஸ்டாப்களில் கொச்சை வார்த்தைகளில் பேசிக்கொண்டு காணப்படுவதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளால் சிறிதும் கூட நிற்க முடியவில்லை என்கின்றனர்.

gif 4

மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்துக்காக நிற்கும் போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வது, பின்னே வந்து வண்டியில் சத்தை எழுப்புவது , கேலி கிண்டல் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் செய்துவருகின்றனர். இதனால் பள்ளி விட்டு செல்லும் மாணவிகள் ஒயின்சாப் இருக்கும் பகுதியை கடந்து செல்ல பயத்திலேயே சென்றுவருகின்றனர். ஆனால் காவல் துறைக்கு இதனையெல்லாம் கண்டுக்கொள்ள நேரம் இல்லை, குடித்துவிட்டு வரும் நபர்களை வண்டியுடன் பிடித்து அபராதம் செலுத்தி பணம் வசூலிப்பதையே குறிக்கோளாக கடமையாக கருதுகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு வழங்க முடியும்? எனவே 2003 – மதுவிலக்கு சட்டத்தின் கிழ் மதுபானகக்கடைகளை , பொதுமக்களுக்கு இடையூரராக இருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கவும், மத்திய பேரூந்துநிலையத்தை சுற்றி காணப்படுகின்ற அரசின் ஒயின்சாப்களை குறைக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

போதைப்பொருட்கள் காணப்படும் இடங்களில் குற்றச்செயல்கள் அதிகமாக பெருகி காணப்படும், அவ்விதத்தில் இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைள் மேற்கொள்ளாவிட்டால் பின்னாளில் ஏற்படும் பிரச்சனைகள், அனைத்து அதிகாரிகளுக்கும் பெரிய தலைவலியாக தான் அமையும்…… ஆக்ஸனில் இறங்குவாரா கலெக்டர்….

ஜெ.கே

gif 2

Leave A Reply

Your email address will not be published.