திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்

திருச்சி வையம்பட்டி அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
வையம்பட்டியிலிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்லும் ஆர்.எஸ். சாலை பகுதியிலுள்ள பெரிய ஆற்றுப்பாலத்துக்குக் கீழ் பகுதியில் சனிக்கிழமை துர்நாற்றம் வீசியுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்த போது ஆண் ஒருவர் இறந்துகிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த வையம்பட்டி போலீஸார் அப்பகுதிக்குச் சென்று, அழுகிய நிலையில் கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றினர். இவர் யார், என்பது தெரியவில்லை. போலீஸார் விசாரிக்கின்றனர்.
