திருச்சியில் லாட்டரி, கஞ்சா விற்ற மூவர் கைது

0
Business trichy

MDMK

திருச்சி மாநகரப் பகுதிகளில் லாட்டரி, கஞ்சா விற்ற மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (38). இவர், அப்பகுதியிலுள்ள அங்காளபரமேசுவரி கோயில் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்ற போது பாலக்கரை போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உறையூர் அரசு மருத்துவமனை சாலைப் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், உறையூர் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பாத்திமாநகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனை (44) கைது செய்தனர்.

திருச்சி ராமலிங்கநகர் விவேகானந்தர் தெருவில் கஞ்சா விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த அமாவாசை என்கிற சந்திரசேகரை (56), உறையூர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இவரிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.