திருச்சியில் நிச்சயித்த பெண் நிராகரிப்பு: மாப்பிள்ளை தற்கொலை

0

திருச்சி கே.கே.நகர் மகாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் சாம்ராஜ்(30). பெயின்டர். இன்னும் திருமணமாகவில்லை. தாய் இருதயமேரி மகனுக்கு பல இடங்களில் பெண் பார்த்து வந்தார்.

சந்தா 2

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் ஒரு பெண்ணை பார்த்தனர். அந்த பெண்ணை பிடித்துள்ளதாக சாம்ராஜ் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். விரைவில் திருமண தேதி குறிக்கலாம் என பேசி முடித்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய சாம்ராஜ் கடந்த 2 மாதமாக அந்த பெண்ணிடம் அடிக்கடி பேசி பழகினார்.

பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை, அதனால் பெண் தர முடியாது என கறாராக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாம்ராஜ் நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.