திருச்சியில் மின் திருட்டு புகாருக்கு தொலைபேசி எண் அறிமுகம்

0
Full Page

திருச்சி அமலாகக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் திருட்டு தொடர்பான புகாருக்கு தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Half page

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி அமலாக்க கோட்டத்தின் (திருச்சி, தஞ்சை, விழுப்புரம்) அமலாக்க அதிகாரிகள் கரூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மருதூர், பரளி, கீழ்காட்டுப்பட்டி, தண்ணீர்பள்ளி, அண்ணாநகர் (குளித்தலை), எழுநூற்றுமங்கலம், முத்தம்பட்டி, இருப்புகுழி, பஞ்சப்பட்டி, வடவாம்பட்டி, பாப்பயம்பட்டி, அக்கராம்பட்டி, அய்யம்பாளையம், அழகாபுரி, மாயனூர், சிந்தலவாடி, மேசிந்தலவாடி, சின்னமலைப்பட்டி ஆகிய பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இதில் 4 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, ரூ.3,39,422 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் சமரச தொகையாக ரூ.19 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை.

மின் திருட்டு சம்பந்தமாக திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், திருவண்ணாமலை இரண்டு டிவிசன் உள்ளிட்ட பகுதிகளில் மின் திருட்டு தொடர்பான புகார்களுக்கு 9443329851 என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அமலாக்கம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.