திருச்சியில் கோயில் உண்டியல் உடைத்து திருடிய வாலிபர் கைது

திருச்சி பீமநகர் வடக்கு எடத்தெருவில் சிவசக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் தலைவர் அசோக்குமார்(57). கடந்த 29ம் தேதி இரவு கோயிலை பூட்டிச்சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கைகள் திருடப்பட்டிருந்தது.இது குறித்து அவர் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி(21) என்பவர் சுவர் ஏறிக்குதித்து உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் ரூ.1,127ஐ திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயபாண்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
