திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (25), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மத்திய பஸ் நிலையம் செல்ல வேர் ஹவுஸ் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது முதலியார்சத்திரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணி (எ) மணிகண்டன்(25) அங்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி பிரகாஷிடமிருந்து ரூ.1000ஐ பறித்து சென்றார். இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.
