திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் காவலர் பயிற்சி மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் காவலர் பயிற்சிக்கான மாதிரி தேர்வு (ஜூலை 7) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட மைய நூலக முதுநிலை நூலகர் சி. கண்ணம்மாள் தெரிவித்திருப்பது …
தமிழக காவல் துறையில் 2 ஆம் நிலைக் காவலர்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வு மூலம் காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்தேர்வில் பங்கேற்போருக்கான மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், நூலகம் மற்றும் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இணைந்து நடத்துகிறது. மாதிரித் தேர்வு ஜூலை 7 பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகின்றது. தேர்வுக்காகத் தயாராகி வருவோர் இந்த மாதிரித் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
