திருச்சி மாநகராட்சியை திரும்பி பார்க்க வைத்த புகார் மனு

0
Business trichy

முக நூலின் மூலம் பரவி வந்த செய்தி திருச்சி மாநகராட்சியின் முகத்திரையை கிழித்தது.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களான முகநூலில்பரவிய செய்தி: அனைவரும் திருச்சி மாநகராட்சிக்கு கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பையில்லா திருச்சி விழிப்புணர்வு குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி வருடா வருடம் நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூபாய் 30,000,இரண்டாம் பரிசாக ரூபாய் 20,000, மூன்றாம் பரிசாக 10,000,10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுகிறது.என் முகநூல் நண்பர்களுக்கு நன்கு தெரியும் திருச்சியில் இருக்கும் குப்பைகளையும், அசுத்தங்களையும்,என் முகநூலில் சுட்டிக்காட்டி அதனை மனுவாக மாநகராட்சிக்கு கொடுப்பது எனது வழக்கம்.

Kavi furniture

நான் தரும் புகார் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது திருச்சி மாநகராட்சி. பின்னர் நானும் பலமுறை அதே பிரச்சனையை வலியுறுத்தி மீண்டும் புகார் தருவேன். துளிக்கூட நடவடிக்கை இருக்காது.மக்களின் புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத திருச்சி மாநகராட்சி குறும்படம் போட்டி வைத்து மக்களின் வரி பணங்களை பரிசாக வீணடிப்பது நியாயமா? இந்தப் பரிசு பணத்தை வைத்து மக்களின் பல நல்ல திட்டங்களை கொண்டுவரமுடியும்.பல இடங்களில் குடிநீர் பிரச்சனை, பல இடங்களில் குப்பை தொட்டி இல்லை, பல இடங்களில் சாலை வசதி இல்லை, பல இடங்களில் இன்னும் வேகத்தடை தேவைப்படுகிறது, தெருவிளக்குகள் தேவைப்படுகிறது, இவையெல்லாம் சரி செய்யாது குறும்படப்போட்டி தேவையா?மதிப்புக்குரிய ஆணையர் ரவிச்சந்திரன் அவர்களின் கை பணத்திலிருந்து பரிசுகளை வேண்டுமானால் தரட்டும். மக்களின் வரிப்பணத்திலிருந்து தர வேண்டாம்.இது சம்பந்தமாக மேலும் புகார் மனுக்களை தரவுள்ளேன். நண்பர்களின் ஆதரவு எனக்குத் தேவைப்படுகிறது என்று முக நூலில் பதிவுகளை வெளியிட்டிருந்தார் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரெங்கராஜன் என்பவர்.

மேலும் இதுதொடர்பாக நம்மதிருச்சி இதழுக்காக ரெங்கராஜனை நேரடியாக சந்தித்து பேசியபோது,

    நான் முகநூலில் கூறியபடி எந்தவித நடவடிக்கைகளும் மாநகராட்சி அதிகாரிகள் எடுக்காததால் கடந்த ஜூலை 1 தேதி, வாரந்தோறும் திங்கட் கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரடியாக சந்தித்து எனது மனுவை கொடுத்துத்தேன். அதனை வாங்கி வாசித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்டார்.

திருச்சியில் மாநகராட்சி மூலம் நடக்கும் குறும்படங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும், நான் தங்கள் முன் வைத்த கோரிக்கைகளை மாநகராட்சி செய்து முடித்த பின் தான் அவர்கள் குறும்படம் போன்றவைகளை வெளியிட வேண்டும் என்று கூறினேன். அதற்கு மாவட்ட ஆட்சியர் உங்களுடைய கோரிக்கைகளுக்கும் மாநகராட்சியின் மூலம் நடக்கவிருக்கும் குறும்பட போட்டிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுள்ளார்.

MDMK

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் இலவச கழிவறைகள் இல்லை, அப்படி இருந்தாலும் அது தனியார் வசம் உள்ளது, அதையும் தாண்டி கழிவறைகள் இருந்தால் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. மாநகருக்குள் விபத்துக்கள் உள்ளாகும் முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்கவில்லை. இதுபோன்ற கண்ணுக்கு தெரிந்த பல்வேறு குறைகள் இருக்கிறது. ஆனால் அதற்குரிய அதிகாரிகள் இதுவரையிலும் கண்டுக்கொள்ளவில்லை. மேலும் இதுபோன்ற குறைகள் பல மாநகராட்சியின் மூலம் தீர்க்கப்படாமல் இருக்கிறது, ஆனால் மாநகராட்சியோ வருடா வருடம் குறும்படம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை ஆயிரம் கணக்கில் தேவையில்லாமல் செலவு செய்து வருகின்றனர். அதற்கு செலவிடும் பணத்தை வைத்து இதுப்போன்ற குறைகளை அவர்கள் எப்பவோ தீர்த்திருக்கலாம். ஆகையால் திருச்சி மாநகராட்சி எப்போது நான் வைத்த கோரிக்கைகளை எல்லாம் சரி செய்கிறதோ அப்போது தான் இந்த குறும்பட நிகழ்ச்சியினை நடத்த வேண்டும். மேலும் நான் வைத்த கோரிக்கைகளுக்கு தகுந்த நடவடிக்கைகளை மாநகராட்சியோ, மாவட்ட ஆட்சியரோ எடுக்கவில்லையென்றால் இருவர் மீதும் நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்ததாக கூறினார்.

மேலும் இதுதொடர்பாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அதிகாரி(இன்ஸ்பெக்டர்) திருப்பதியிடம் தொலைபேசி வாயிலாக பேசியபோது….

திருச்சி மாநகராட்சி நடத்தும் கும்பட போட்டிக்கு தடை விதித்து புகார் மனு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர் அதனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புகார் மனு என்பதை விட பொதுமக்களின் கோரிக்கைகள் என்று தான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற மாவட்டங்களை விட திருச்சியில் மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை மேல்மேலும் மக்களிடம் நடைமுறைக்கு கொண்டுவர இதுப்போன்ற குறும்பட போட்டிகள் ஏதுவாக அமைந்துள்ளது. மேலும் இதுபோன்ற புகார்களை ஏற்று விரைவில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் ரெங்கராஜன் அளித்த புகாருக்கு தீர்வுக்கண்ட பிறகு தான் மாநகராட்சி குறும்படத்தை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அதனைப்பற்றி கேட்டபோது.
விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் குறைந்தபட்சம் 1மாதத்தில் அவர் அளித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கைள் மேற்கொள்வதாக கூறினார்.

கடந்த வருடம் தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் மூன்று இடத்தை நழுவவிட்ட மாநகராட்சி இவ் வருடம் அவற்றை அடையவேண்டுமானால் மக்களின் அடைப்படை பிரச்சனைகளை சரிசெய்தாலொழிய முடியும் என்கின்றனர் பொதுமக்கள்…….என்ன செய்ய போகிறது மாநகராட்சி?

 ஜெ.கே, ஜோல்னா ரெங்கா

Pranav city

Leave A Reply

Your email address will not be published.