சிகாகோ மாநாட்டுக்கு 7 தமிழக மாணவர்களுக்கு விசா மறுப்பு

0
Business trichy

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி செல்லகுமார், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் வரும் ஜூலை 4-7 வரை 10ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன், வெண்ணிலா, பாலாஜி, கவிதா, கவிமணி, அமுதா மற்றும் மதுபாஷினி ஆகியோர் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர். இதற்காக விசா கோரி விண்ணப்பித்திருந்த இவர்களுக்கு, சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கடந்த 18 முதல் 22 ஆம் தேதி வரை விசாவுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. ஆனால், அவர்களின் நிதிநிலையைக் காரணம் காட்டி விசா வழங்க மறுத்துவிட்டது அமெரிக்கத் தூதரகம்.

 

Rashinee album

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஜூன் 26 கடிதம் எழுதியுள்ளார் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார்.
அந்த கடிதத்தில், “சிகாகோவில் நடக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டில் தமிழகத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஏழு இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு மாநாட்டுக் குழுவானது அழைப்பு அனுப்பியுள்ளது.

 

Image

அமெரிக்காவில் இவர்களுக்கான அனைத்து செலவுகளையும் மாநாட்டுக் குழுவே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் நிதிநிலையைக் காரணம் காட்டி அவர்களின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது அமெரிக்கத் தூதரகம். இதனால் தமிழக மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தருமபுரி எம்.பி சரவணன், ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரும் வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.