சேலம் வாழப்பாடி இளைஞர் லால்குடியில் மரணம்

0

கொலையா, தற்கொலையா போலீசார் தடுமாற்றம்

லால்குடியில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த இளைஞர் கேசவன் லால்குடியில் கொலையா தற்கொலையா போலீஸ் விசாரணை
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நகர் கிராமத்தில் வசித்து வருகிறார் வின்சென்ட். இவர் மனைவி சகாயம் அதே பகுதியில் உள்ள ஊட்டச்சத்து அங்கன்வாடியில் ஆசிரியராக பணியாற்றி உள்ளாட்சி தேர்தலில் நிற்க விருப்ப ஓய்வு பெற்று விட்டார் வின்சென்ட் சகாயம் இவர்களுக்கு பிரபு 40 பெலிக்ஸ் 23 மற்றும் ஒரு மகன் 3 மகன்கள் உள்ளனர்.

சந்தா 2

இதில் பிரபு திருச்சி மாவட்டத்தில் மணப்பறை செல்லும் வழியில் கடை  ஒன்று நடத்தி வருகின்றனர். மேலும் தந்தை வின்சென்ட் மற்றும் பிரபு ஆகியவர்கள் வைக்கோல் வியாபாரம் சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இதில் சேலம் மாவட்டம் வாழப்பாடி சேசன்சாவடி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வேலு மகன் கேசவன் 27. இவர் 2 ஆண்டுகளாக வின்சென்ட் சகாயம் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

‌சந்தா 1

இவர் ரூ 15 ஆயிரம் பணம் வின்சென்ட் குடும்பத்தாருக்கு தர வேண்டியதாக தெரிகின்றது. இந்நிலையில் கேசவன் தனது சொந்த ஊருக்கு சென்றதாக தெரிகிறது. பிறகு கேசவனை பிரபு குடும்பத்தினர் அவரை 2 ஆம் தேதி அழைத்துவந்துள்ளனர். பிறகு 3 ம் தேதி காலை அவர் தங்கியிருந்த அறையில் கேசவன் கை ஒடிந்து நாக்கு தள்ளிய நிலையில் தூக்கில் பிணமாக கிடந்தார்.

பிறகு அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் 3 மணிக்கு வந்துள்ளார் .அது வரை தூக்கில் பிணமாக கிடந்தவரை அவிழ்க்கவில்லை. அதனால் கேசவன் வின்சென்ட் குடும்ப த்தாரிடம் வாங்கிய பணத்திற்காக கொடுக்க முடியவில்லை என்பதால் தூக்கிட்டு இறந்தாரா இல்லை. அவரை அடித்து கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்டனரா என்று கேசவன் குடும்பத்தினர் சந்தேக அடைந்துள்ளனர். மேலும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்ததும் தான் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.