கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத ப.குமார்

0
D1

திருச்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் பிறந்த தேதி (21-4-1971 = 2+1+4+1+9+7+1=25 = 2+5 = 7)
பிறந்த தேதி கூட்டு எண் (21= 2+1=3) 3 குருவை குறிக்கும். இவரை தலைமைக்கு ஆலோசனை சொல்லும் இடத்திலும், இவரை தலைமை அதிகாரத்திற்கு அழைத்து சென்றதும் எண் 3யே ஆகும். இந்தியாவிற்கு எண் 3 இராசியான எண்ணாகும். அதனால் டெல்லியில் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இரண்டு முறை எம்.பி.யாக பதவி ஏற்க முடிந்தது. தமிழ்நாட்டிற்கு எதிர் எண் ஆகும். அதனால் தான் தமிழக எம்.பி.களிடம் ஒரு டிவி சர்வேயில் மக்களிடம் 100 மார்க்குக்கு 13% மட்டுமே வாங்க முடிந்தது.

 

எனவே, தான் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த ப.குமாரால் விமான விரிவாக்கம், பேருந்து நிலைய பிரச்சினை உள்ளிட்ட திருச்சி மக்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. பிறந்த தேதி எண் 6 உடைய தமிழ்நாட்டிற்கும் திருச்சிக்கு இராசியான எண் உடைய சிவா எம்.பி. தனிநபர் தீர்மானத்தில் பல நல்ல காரியம் செய்துள்ளார். ப.குமார் திருச்சிக்கு பெரிய திட்டங்கள் நிறைய செய்ய நினைத்தாலும் அவர் பிறந்த எண் 3 அவரை தடுக்கிறது.
ப.குமார் பிறந்த எண் 3, பிறந்த எண் 6 உடைய ஜெ.ஜெயலலிதா எண்ணுக்கு எதிர் எண் ஆகும். எடப்பாடி முதல்வர் கே.பழனிச்சாமி பிறந்த எண் 2க்கும் கூட்டு எண் 6க்கும் எதிர் எண் ஆகும். ஓபிஎஸ்ன் கூட்டு எண்ணுக்கும் பெயர் எண்ணுக்கும் எதிர் எண் ஆகும்.

 

N2

பிறந்த தேதியின் மொத்த கூட்டு எண் 7
இது கேதுவை குறிக்கும். ராகு, கேது ஒரே உடல் உடைய அசுரன். அமுதம் உண்ட போது விஷ்ணு அகப்பையால் அடித்து உடலை இரு துண்டாக்கினார். தலைப்பகுதி ராகு, உடல் பகுதி கேது. ராகு எண் 4 வேகமாகச் செல்லக்கூடியது. எண் 7 கேது மெதுவாக நகரக்கூடியது. இவை இரண்டும் போராடி வெற்றி காணுபவை. சில நேரங்களில் எண் 7 காரர்கள், எண் 4 காரர்களின் உழைப்பில் வாழ்வார்கள்.
எண் 7 அனைத்து ஜாதி மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும். அதனால் தான் பா.குமாரிடம் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர் என சுற்றி உள்ளனர். எண் 7 குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் போராடக்கூடிய எண் ஆகும். எண் 7 தமிழ்நாட்டிற்கும் ஓபிஎஸ், இபிஎஸ்ன் ராசியான எண் ஆகும்.

 

D2

ரங்கராஜன் குமாரமங்கலம் (12-5-1952 = 1+2+5+1+9+5+2 = 25 = 2+5 = 7)
பிறந்த தேதி எண் 3, கூட்டு எண் 7 உடைய ரங்கராஜன் குமாரமங்கலம் சிறந்த இந்திய அமைச்சராக இருந்தார். கூட்டு எண் 7 தமிழ்நாட்டிற்கும், திருச்சிக்கும் ராசியான எண். எனவே, இங்கு பாலம், விளக்கு அமைத்தல் போன்ற நல்ல காரியத்தை செய்தார். இவர் இழப்பு திருச்சி மக்களுக்கு பெரிய இழப்பு. இதே எண் உடைய பா.குமார் திருச்சிக்கு நல்ல திட்டங்களை செய்ய தவறிவிட்டார்.
எண் 7எண் 9 போல் தைரியக்காரன் இல்லை.
பஸ்ஸ்டாண்டு கட்டும் சம்பவத்தில் இவர் ஒருவரை அடிக்க அவர் இவரை திருப்பி அடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பொதுவாக எண் 7 அறப்போராட்டம் மட்டுமே பண்ண முடியும். அடிதடி போராட்டம் செய்யக்கூடாது. கே.என்.நேரு பிறந்த தேதி 9 இது செவ்வாயை குறிக்கும். அதனால் அவர் அடித்தாலும் முறைத்தாலும் எதிரி பயப்படுவார். ஆனால் அதே முயற்சியை எண் 7 உடைய ப.குமார் செய்தது தவறு.

 

எண் 7 உடையவர் பலர் உடன் பாதுகாப்பாக சென்றாலும் ஒருவர் தாக்க வரும்போது எண் 7 உடையவர்களை பாதுகாக்க வந்தவர்கள் விட்டுவிட்டு ஓடிவிடுவர். எண் 7 காரர்கள் அடிவாங்குவர். அவமானப்படுவர். எண் 7 உடைய கமல், கூட்டு எண் 7 உடைய அரவிந்கெஜ்ரிவால் ஆகியோர் மீதும் செருப்பு வீசப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.
ப.குமார் (P.KUMAR) 8+2+6+4+1+2 = 23 = 2+3 = 5
எண் 5ல் எண் 23 இராஜவசிய எண்ணாகும். அதனால்தான் பா.குமார் திட்டமிட்டுத்தான் எம்.பி. சீட் வாங்கினார். திட்டமிட்டு காய்நகர்த்தி மாவட்டச் செயலாளர் பதவி வாங்கினார். அனைத்தும் திட்டமிட்டும் தன் எதிரிகளையும் திட்டமிட்டு ஒழிக்க தவறியது இல்லை.தொடரும்…

N3

Leave A Reply

Your email address will not be published.