கோடியம்பாளையம் தனி ஊராட்சி அமைக்க நெசவாளர் பெண்கள் ஆட்சியரிடம் மனு

0
Full Page

தொட்டியம் வட்டம், தொட்டியம் ஒன்றியம், அலகரை ஊராட்சியின் ஒரு துணைக் கிராமமாக கோடியம்பாளையம் உள்ளது. இக்கிராமம் பாரம்பரிய நெசவாளர் கிராமமாகும். சுமார் 5,000 நெசவாளர்கள் இங்கு வசிக்கின்றனர்.
பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் நெசவாளர்கள் தற்போது நெசவுத் தொழில் நலிவடைந்துவிட்டதால் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பெரிதும் அல்லல்பட்டு வகுகின்றனர்.
மாற்றுத் தொழில் தெரியாத நிலையில் கூலிவேலைகளுக்குச் சென்று பிழைத்து வருகின்றனர். ஒரு சில குடும்பங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அதற்கான அடிப்படை வசதிகளோ, அரசு மானியமோ இல்லை.

 

Half page

மேலும், இக்கோடியம்பாளையம் கிராமம் சேலம் முதன்மைச் சாலையில் இருந்தாலும் எவ்வித அரசுக் கட்டிடங்களும் இவ்வூரில் இல்லை. ஊராட்சிமன்றம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், துணை சுகாதார நிலையம், கால் நடைக்கிளை நிலையம், ஊராட்சி சேவைக் கட்டிடம், மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், மகளிர் சுகாதார வளாகம் முதலிய வசதிகள் எதுவும் இங்கு இல்லை.
இவ்வூரில் அரசுத் தொடக்கப்பள்ளி கூட இல்லை. அனைத்துத் தேவைகளுக்கு பக்கத்து ஊர்களுக்கே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. கோடியம்பாளையம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஒரு ஊராக இதுவரை இருந்து வருகிறது.

 

எனவே, கோடியம்பாளையம் நெசவாளர் கிராமத்தை தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, நெசவாளர் பெண்கள் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவி வெ.வெள்ளையம்மாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டப் பெண்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 24ம் தேதி கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, இயக்கத்தின் செயலாளர் ச.விஜயா, பொருளாளர் பூங்கொடி செயற்குழு உறுப்பினர் தனப்பாக்கியம், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் விஜயராணி, ஜெயலட்சுமி, மங்கையர்க்கரசி, நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தே.லதா மகேஸ்வரி, சமூக நலக் கூட்டமைப்பின் திருச்சி மாவட்டத்தலைவர் பொன். குணசீலன், துணைத்தலைவர் பெ.அய்யாரப்பன், தீபச்சுடர் அறக்கட்டளை இயக்குநர் டி.எஸ்.விசாலாட்சி, அருவி அறக்கட்டளை இயக்குநர் சிவ.கலாராணி, ஸ்மைல் அறக்கட்டளை இயக்குநர் இரா.இராபின் சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.