கடனைத் திருப்பிச் செலுத்த தயங்கும் மாணவர்கள்

0
D1

பொதுத் துறை வங்கிகளிடம் பெறும் கல்விக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாமல் இருப்பதால் வங்கிகளுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் கூட்டமைப்பிடமிருந்து கிடைத்த விவரங்களின்படி, இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் கல்வித் துறைக்கு வழங்கும் கடன்களில் வாரக் கடன்களின் அளவு 2016 மார்ச் 31ஆம் தேதியில் 7.29 சதவிகிதத்திலிருந்து 2018 மார்ச் 31ஆம் தேதியில் 8.97 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய கல்விக் கடன்கள் அதிகமாக வாராக் கடன்களாக மாறியுள்ளன. 2018 மார்ச் 31ஆம் தேதி ரூ.177.66 கோடியாக இருந்த இவ்வங்கியின் வாராக் கடன் 2019 மார்ச் 31 நிலவரப்படி ரூ.396.35 கோடியாக உயர்ந்துள்ளது. இது 8.15 சதவிகிதம் கூடுதலாகும்.

 

N2

வேலையின்மை மற்றும் குறைந்த ஊதியத்துக்கு வேலை கிடைப்பது போன்ற காரணங்களால்தான் கல்வித் துறைக்கு வழங்கப்படும் பெரும்பாலான கடன்கள் வாராக் கடன்களாக மாறுகின்றன. இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் தொழில் பிரிவுத் தலைவரான ஆனந்த் சுப்ரமணியம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “பல்கலைக் கழக மானிய ஆணையத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற எந்தவொரு கல்லூரியிலும் சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் வழங்கப்படும். எனினும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் கடன் மதிப்பெண்ணை நாங்கள் பார்ப்போம். அது குறைவாக இருந்தால் கடனைத் திரும்ப வசூலிப்பது சவாலான ஒன்றுதான்” என்கிறார்.

 

கடனைச் செலுத்தாதவர்களுக்கு வங்கிகள் தரப்பிலிருந்து நோட்டீசுகள் அனுப்பப்படுகின்றன. எனினும் கண்காணிக்க முடியாத முகவரி தகவல்களைக் கொண்ட கடனாளிகளுக்கு எதிராகவோ அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தத் திறனிருந்தும் அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு எதிராகவோ எந்தவொரு நடவடிக்கையும் பாய்வதில்லை. ரூ.4 லட்சத்துக்குக் குறைவான கல்விக் கடன்களுக்கு எவ்வித உத்தரவாதமும் மாணவர்களிடம் கேட்கப்படுவதில்லை என்பதால் அவற்றைத் திருப்பிச் செலுத்த அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
வேலையின்மை மற்றும் குறைவான ஊதியமும் அவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனைக் குறைக்கிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.