திருவானைக்காவல் பாலம் ஓகே… சர்வீஸ் ரோடு எப்போது ?

திருச்சி மாநகரம் – ரங்கம் இடையே இணைக்கும் திருவானைக்காவல் பாலம் திறக்கப்பட்டது.

இனி திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக வாகனங்களில் செல்லலாம்.
பாலப் பணிகள் நடந்து வந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக வாகனங்கள் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை புறவழிச்சாலை வழியாக நம்பர் ஒன் டோல்கேட் பகுதிக்கு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அதிக நேரமும், வீண் அலைச்சலும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.
ஆனால் திருச்சியில் இருந்து ரங்கம் செல்வதற்கான சர்வீஸ் ரோடுகள், கல்லணை சாலையுடன் இணைப்பதற்கான சர்வீஸ் ரோடு, திருவானைக்காவல் பகுதிக்குள் செல்வதற்கான சர்வீஸ் ரோடுகளுக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அவை எப்போது துவக்கப்படும்? என்கிற கேள்வி பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
