திருச்சி மாநகராட்சி சார்பில் குறும்பட போட்டி

0
Business trichy

இதனை அனைவரும் திருச்சி மாநகராட்சிக்கு கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்.திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பையில்லா திருச்சி விழிப்புணர்வு குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி வருடா வருடம் நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூபாய் 30,000,இரண்டாம் பரிசாக ரூபாய் 20,000, மூன்றாம் பரிசாக 10,000,10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுகிறது.என் முகநூல் நண்பர்களுக்கு நன்கு தெரியும் திருச்சியில் இருக்கும் குப்பைகளையும், அசுத்தங்களையும்,என் முகநூலில் சுட்டிக்காட்டி அதனை மனுவாக மாநகராட்சிக்கு கொடுப்பது எனது வழக்கம்.

 

web designer

நான் தரும் புகார் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது திருச்சி மாநகராட்சி. பின்னர் நானும் பலமுறை அதே பிரச்சனையை வலியுறுத்தி மீண்டும் புகார் தருவேன். துளிக்கூட நடவடிக்கை இருக்காது.மக்களின் புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத திருச்சி மாநகராட்சி குறும்படம் போட்டி வைத்து மக்களின் வரி பணங்களை பரிசாக வீணடிப்பது நியாயமா? இந்தப் பரிசு பணத்தை வைத்து மக்களின் பல நல்ல திட்டங்களை கொண்டுவரமுடியும்.பல இடங்களில் குடிநீர் பிரச்சனை, பல இடங்களில் குப்பை தொட்டி இல்லை, பல இடங்களில் சாலை வசதி இல்லை, பல இடங்களில் இன்னும் வேகத்தடை தேவைப்படுகிறது, தெருவிளக்குகள் தேவைப்படுகிறது, இவையெல்லாம் சரி செய்யாது குறும்படப்போட்டி தேவையா?மதிப்புக்குரிய ஆணையர் ரவிச்சந்திரன் அவர்களின் கை பணத்திலிருந்து பரிசுகளை வேண்டுமானால் தரட்டும். மக்களின் வரிப்பணத்திலிருந்து தர வேண்டாம்.இது சம்பந்தமாக மேலும் புகார் மனுக்களை தரவுள்ளேன். நண்பர்களின் ஆதரவு எனக்குத் தேவைப்படுகிறது
– ஜோல்னா ரெங்கா.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.