இளைஞர்களுக்கான திறன் பயிற்சி பயிலரங்கம் (SKILL WORKSHOP)

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலைவாய்ப்பற்றோருக்கான நிவாரணத்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பயிலரங்கம் (Skill Workshop) நிகழ்ச்சி 05.07.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கான பல்வேறு தொழிற் திறன் பயிற்சிகளை வழங்கவுள்ளனர். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இத்திறன் பயிற்சி பயிலரங்கத்தில் இளைஞர்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சி விவரங்களை அறிந்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கிறார்.
